மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு பொதுவுடைமை வங்கிகளில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் அரசு துறை வங்கிகளில் காலியாக இருக்கும் 63,200 காலி பணியிடங்களை நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கிசான் கிரெடிட் கார்டுகளை வங்கிகளின் ஏ.டி.எம். மெஷினில் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இன்று புதுடெல்லியில் நிருபர்களிடம் கூறினார்.