Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

என்னுடைய முதல் தயாரிப்பு அஜித்துக்காக இல்லை- யுவன் ஷங்கர் ராஜா.


சில நாட்களுக்கு முன்னர் நமக்கு கிடைத்த தகவலின் படி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா படத் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்க இருக்கிறார் என்பது பற்றியதாகும்.அதிலும் குறிப்பாக இவரின் முதல் படம் அஜித்துடன் தான் அமையும் என்றும் பேசப்பட்டது.

ஆயினும் இதை முற்றிலுமாக மறுத்துள்ளார் யுவன்,அஜித்தை வைத்து படம் தயாரிக்கும் எண்ணம் எதுவும் தன்னிடம் இல்லை என  கூறியுள்ளார்.இதேவேளை தன்னுடைய சிறு வயது அனுபவங்களை பகிர்ந்துகொண்ட யுவன்,தான் சிறு வயதாக இருக்கும்போது ஒளிப்படக்கருவி ஒன்றை எப்போதும் தன்னுடன் வைத்திருந்ததாகவும், தன்னுடைய சகோதரர்களுடன் சேர்ந்து நிறைய புகைப்படங்கள் மாறும் காணொளிகளை தான் படமாக்கியதாகவும்  கூறியிருந்தார்.

தற்போது கதை எழுதுவதில் தனக்கு ஆர்வம் இருப்பதாகவும், நிச்சயமாக ஒரு நாள் இயக்குனராக தன்னை வளப்படுத்திக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை யுவன் குடும்பத்தை பொறுத்தவரை அத்தனை  பேரும் மிக திறைமையான கலைஞர்கள் அதனால் ஒரு படத்தை அவர் இயக்கி அவரே தயாரிக்கும் பட்சத்தில் வெளிக் கலைஞர்களை அவர் நாட வேண்டிய தேவை இருக்கப்போவதில்லை.

[vuukle-powerbar-top]

Recent Post