சமூக ஆர்வலராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அரவிந்த் கெஜ்ரிவால் புதிய கட்சி தொடங்க இருப்பதாக முன்னர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது கட்சிக்கு ஆம் ஆத்மி என அவர் பெயரிட்டிருப்பதாக அறிவித்துள்ளார். கெஜ்ரிவால், 300 உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் முன்னிலையில் தனது கட்சியின் பெயரினை அவர் அறிவித்தார்.
மேலும், இதனை வைத்து கட்சியின் தேசிய கவுன்சில் அமைக்கப்படும் என்று கூறினார். அந்த கவுன்சில் அடுத்ததாக 30 உறுப்பினர்கள் கொண்ட தேசிய செயல் தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
அவர்கள் கட்சியின் உயர்மட்ட அளவிலான முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. மேலும், பொது ஜனத்திற்காக இந்த கட்சியை தொடங்கியதாக கூறும் கெஜ்ரிவால், தலைவர், துணை தலைவர் மற்றும் பொது செயலாளர் போன்ற எந்த பதவிகளும் உருவாக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.