புதுச்சேரியின் கருவாடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. அவரது இரு மகன்கள் தங்கள் பகுதிக்கு அருகே வங்காள விரிகுடா கடலில் நீந்தி குளிப்பதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்றனர்.
இந்நிலையில், அவர்களிருவரும் கடலில் மூழ்கி இறந்தனர். அவர்களின் உடலை தேடும் பணியை தமிழக மற்றும் புதுச்சேரி மாநில போலீசார் மேற்கொண்டனர்.
இதில், கந்தசாமியின் மூத்த மகன் பழனிவேல் என்பவர் உடல் வைத்திக்குப்பம் கரையருகே இன்று கண்டெடுக்கப்பட்டது.
மற்றொரு மகனான விக்னேஷ்வரமூர்த்தி உடலை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.