
சிபிஐயின் புதிய இயக்குநராக ரஞ்சித் சின்ஹா அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா மூத்தத் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினர். அதில், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு மூலம் சிபிஐ இயக்குநர் நியமிக்கப்பட வேண்டும் என லோக்பால் மசோதாவில் வரையறுக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தனர். ஆனால், இதனை நிராகரித்த மத்திய அரசு, சிபிஐ நியமனத்தில் விதிமீறல் இல்லை என விளக்கம் அளித்திருந்தது.
இதுகுறித்து, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்கரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சிபிஐயின் புதிய இயக்குநர் நியமனம் தொடர்பாக, மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் சரியானதுதான் என்று கூறியுள்ளார். சிபிஐ போன்ற ஓர் உயர் அமைப்பின் உயர்ந்த பதவியை நீண்ட நாள் காலியாக வைத்திருக்க முடியாது என்றும அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து பாரதிய ஜனதா கேள்வி எழுப்புவது முற்றிலும் தவறானது என்றும அவர் தெரிவித்துள்ளார்.