கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதனை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.
திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் ஏற்றப்பட்டது.இதனை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபப்பெருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மலை மீது மகா தீபம் ஏற்றிய போது அண்ணாமலையார் கோயில் தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளினர்.மேலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவத்தில் எழுந்தருளி 3ம் பிரகாரத்தில் காட்சியளித்தார். அப்போது கோயில் கொடிமரம் அருகேயுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்ற்றப்பட்டது இதனையடுத்து மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இந்த தீபத்திருநாளில் ஈழத் தமிழர்களின் மாவீரர் நாளும் உலகின் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.தீபத்திருநாளில் ஏற்பட்ட ஒளி போல ஈழத் தமிழர்களின் வாழ்விலும் வெளிச்சம் கிடைக்கட்டும் என நம்புவோம்.