ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்த "சிவாஜி" படத்தை முப்பரிமான காட்சியமைப்புடன் தயாரித்து வெளியிடவுள்ளனர்.இப்படத்திற்கான சகல வேலைகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில்,வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி இப்படத்திற்கான முன்னோட்டக் காட்சி உத்தியோகபூர்வமாக சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உற்பட "சிவாஜி" படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.அன்றைய தினம் நடைபெறும் நிகழ்ச்சியில் "சிவாஜி" படத்தில் இடம்பெற்றுள்ள நான்கு பாடல்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தை பார்க்கும் வாய்ப்பு ரஜினி அவர்களுக்கு கிடைத்தது.இப்படத்தை முழுவதுமாக பார்த்து இரசித்த ரஜினி இப்படமானது மிக பிரமாதமாக வந்திருப்பதாக தெரிவித்தார்.
"சிவாஜி" முப்பரிமான காட்சியமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள இப்படமானது வரும் 12 - 12 - 12 அன்று திரைக்கு வரவுள்ளது.