ஜீவா மற்றும் சந்தானம் ஜோடி இணைந்து நடித்த "சிவா மனசில ஷக்தி" படத்தின் நகைச்சுவை இரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது யாவரும் அறிந்ததே.
இவ்வாறு இவர்கள் இருவரது ஜோடிப் பொருத்தமும் மிக பிரமாதமாக அமைந்திருந்தது.இதேபோல் வரும் டிசம்பருக்கு வெளியாகவுள்ள "நீதானே என் பொன் வசந்தம்" படத்தில் கூட இவர்கள் இருவரது நகைச்சுவை கலாட்டாவில் திக்குமுக்காடப் போகிறார்கள் இப்படத்தை பார்ப்பவர்கள்.
இந்த ஜோடியின் கலகலப்பை மேலும் அதிகமாக்க "சிங்கம் புலி" படத்தை இயக்கிய சாய் ரமணி இயக்கப்போகும் புதிய படமொன்றிலும்
இவர்கள் இருவரையும் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இப்புதிய படத்தின் பெயர் மற்றும் நாயகி பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.