Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பொதுத்துறை வங்கிகளில் நிதிமோசடிகள் அதிகரிப்பு


பொதுத்துறை வங்கிகளில், நிதிமோசடிகள் கடந்த ஆண்டைவிட சுமார் 2 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டில் 3 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி மோசடி, பொதுத்துறை வங்கிகளில் நடந்ததாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். அது, இந்த ஆண்டில் இதுவரை 6 ஆயிரத்து 457 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இந்த ஆண்டில் இதுவரை 728 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி புகார்கள் பெறப்பட்டுள்ளதாவும் அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

மோசடிகள் நடக்க வாய்ப்புள்ள நடவடிக்கைகள் குறித்து, வங்கிகளை ரிசர்வ் வங்கி அடிக்கடி எச்சரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தெரிவிக்கப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க, வங்கியின் இயக்குனர் வாரியத்தை சேர்ந்த சிறப்பு கமிட்டியை அமைக்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post