சிறு வயதிலேயே தமிழ் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து "அஞ்சலி" போன்ற பல படங்கள் மூலமாக சிறந்த குழந்தை நட்சத்திரமாக பெயர் வாங்கியவர் நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி.
பின்னர் அஜித் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான "கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்" படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்த ஷாமிலி 2009 ஆம் ஆண்டு வெளியான "ஒய்" தெலுகு படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
பின்னர் சினிமாவில் நடிப்பதை சிறுதுகாலம் நிறுத்தி வைத்த அவர் சிங்கப்பூர் நாட்டிற்கு சென்று அங்கு பாஷன் டிசைனிங் கல்வி கற்று அண்மையில் சென்னை திரும்பியுள்ளார்.
சென்னையில் மிகப் பெரிய பாஷன் வணிக நிறுவனம் ஒன்றை நிறுவ ஆசைப்பட்டுள்ள ஷாமிலிக்காக தகுந்த இடத்தை தேடி வருகிறார் ஷாமிலியின் அக்கா கணவரான அஜித்.
சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் தியாகராஜர் நகரில் மும்முரமாக இடம் தேடி வரும் அஜித்,வரும் கிருஸ்துமஸ் பண்டிகை அல்லது புது வருடத்துக்குள் இந்நிறுவனத்தை ஆரம்பிக்க தன் மைத்துனிக்கு ஆலோசை வழங்கியுள்ளார்.