அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளபட்டுள்ள ஆசிரியர், ஊழியர்களை பாதிக்கும் ஆள்குறைப்பு மற்றும் ஊதியக்குறைப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டமைப்புகள் ஒருங்கிணைந்து 15.11.2012 அன்று சிதம்பரம் காந்தி சிலை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்தில்தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்து உள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடுதல் வேண்டும்.
இங்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காக தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் நின்று போராடுகின்றது.
எனவே தமிழக முதல்-அமைச்சர் இப்பிரச்சினையில் தலையிட்டு பல்கலைக்கழகத்தை கையப்படுத்தி அரசுடைமையாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.