இலங்கை இராணுவத்தில் தமிழ் இளம் பெண்கள் இணைக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.
18 வயதிற்கும் 22 வயதுக்கும் உட்பட்ட சுமார் 100 தமிழ் இளம் பெண்கள் இலங்கை இராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கான நேர்முகத் தேர்வு கிளிநொச்சியில் நடைபெறப்போவதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இந்த நேர்முகத்தேர்வு அநேகமாக முன்னாள் போராளிகளை குறிவைத்து இடம்பெறப்போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை தமிழர்கள் இலங்கை ராணுவத்தில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.