தமிழக மின்தடையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த செய்தி தமிழக மக்களுக்கு நற்செய்தி தான்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் ரூ.3,500 கோடி செலவில் புதிய அனல் மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அனல்மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். புதிய அனல் மின்நிலையத்தில் 95 சதவீதம் வேலைகள் முடிந்து விட்டன. மின்உற்பத்தி செய்வதற்காக அனல் மின் நிலையத்தில் சோதனை ஓட்டமாக நடைபெற்று, அப்போது ஏற்படும் சில குறைபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன.
பின்னர் சோதனை ஓட்டத்தில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த 24-ந் தேதி 600 மெகாவாட் மின்உற்பத்தி செய்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் புதிய அனல்மின்நிலையத்தில் மீண்டும் நேற்று சோதனை ஓட்டம் தொடங்கியது. இந்த சோதனை ஓட்டத்தில் நேற்று மாலை 5 மணி வரை 105 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது.
இந்த மின்உற்பத்தி படிப்படியாக அதிகரித்து 600 மெகாவாட் மின்சாரம் அளவுக்கு உற்பத்தியை செயல்பட தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.