Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விண்ணில் ஏவப்பட்டது இலங்கையின் முதல் செயற்கைக்கோள்

இலங்கையின் முதலாவது செயற்கைக்கோள் சுப்ரீம் சற் நேற்று சீனாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. 

சீனாவின் இரு அரசுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையின் தனியார்துறை நிறுவனம் ஒன்று இந்த செயற்கைக்கோளை வானில் செலுத்தியுள்ளது. 

இலங்கை நேரப்படி, நேற்று பிற்பகல் 4.43 மணியளவில் இந்த செயற்கைக்கோளைத் தாங்கிய ஏவுகலம் சீனாவின் சி சங் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டது. 

இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 36 ஆயிரம் கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. 

தெற்காசியாவில் சொந்தமாக செயற்கைக்கோளை வைத்திருக்கும் மூன்றாவது நாடாகவும், உலகில் 45 வது நாடாகவும் இலங்கை
இருப்பதாக கூறப்பட்டுள்ள போதும், இது இலங்கை நிறுவனத்துக்கு முழுமையாகச் சொந்தமானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post