விஜயின் "துப்பாக்கி" மற்றும் அஜித்தின் "பில்லா 2 " படங்களில் வில்லனாக நடித்த வித்யூத் ஜாம்வலை யாராலும் மறக்க முடியாது.ஒரு சிறு குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுவிட்டார்.
இந்தியில் வெளியான "காக்க காக்கா" படத்தில் நாயகனின் நண்பனாக இந்திய சினிமாவிற்குள் நுழைந்த வித்யூத், அப்படம் வெளியான ஆண்டில் இடம்பெற்ற "பிலிம் பெயார்" விருது வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதை தட்டிச் சென்றார்.
இவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலத்தில் மிக பெரிய நட்சத்திரமாக வளர்ந்த வித்யூத்,"துப்பாக்கி" படத்தில் விஜய்யுடன் நடித்த போது,எவ்வாறு ஒரு மனிதன் மிக அமைதியாக இருக்கமுடியம் என்ற விடயத்தை அறிந்து கொண்டதாகவும்,அஜித்துடன் பணிபுரிந்த போது எவ்வாறு பெண்களை மிக மரியாதையுடன் நடத்துவது என்பதை கற்றுக் கொண்டதாகவும் கூறினார்.
வித்யூத் ஜாம்வாலின் உடல் கட்டமைப்பு மற்றும் அவருடைய வசீகர தோற்றத்தினால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மிக பெரிய பெண் இரசிகைகள் கூட்டத்தையே தனதாக்கி கொண்டுள்ளார்.இதனால் தமிழ் படத் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் இவரை நாயகனாக நடிக்க அழைத்த போதும், தனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தையே இவர்
தேர்வு செய்து நடித்துக்கொண்டுள்ளார்.