அடிக்கடி பல முகாமையாளர்களை ( மனேஞர்) மாற்றிய நடிகை அமலா பால் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.தான் கடைசியாக தேர்வு செய்துள்ள முகாமையாளராவது தன்னுடன் கடைசிவரை இருக்க வேண்டும் என நினைத்த அமலா பால் இம்முறை தேர்வு செய்துள்ளது அவரது தந்தையை.
ஒரு நடிகையின் முகாமையாளருக்கு என்னென்ன தகுதிகள் தேவையோ அவை அத்தனையையும் ஓன்று விடாமல் கற்று ஒரு சிறந்த முகாமையாளருக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுவிட்டார் அமலாவின் தந்தை.
தன் தந்தையால் மட்டுமே தனக்கான சிறந்த முகாமையாளராக இருக்க முடியும் எனக் கூறிய அமலா பால்,அதற்காகவே தன் தந்தையை சிறந்த முகாமையாளராக தான் தரம் உயர்த்தியதாக கூறியுள்ளார்.