Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மானியங்களை ரொக்கமாக வழங்கும் அரசின் அறிவிப்புக்கு பாரதீய ஜனதா எதிர்ப்பு

குஜராத் தேர்தல் நேரத்தில், மானியங்களை ரொக்கமாக வழங்கும் அரசின் அறிவிப்புக்கு பாரதீய ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு மக்களுக்கு வழங்கி வரும் மானியங்களை ஆதார் அடையாள அட்டையின் அடிப்படையில் பயனாளிகளுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் ரொக்கமாக செலுத்தும் முறையை அமல்படுத்தப்போவதாக அறிவித்தது.

குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் மாதம் 13, 17ந் தேதி இரண்டு கட்டமாக நடக்கவுள்ள நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானியின் தலைமையில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, குஜராத் மாநில தேர்தல் பொறுப்பாளர் பால்பிர் புஞ்ச் ஆகியோர் தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத்தை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post