நார்வேயில் குழந்தையை கண்டித்த இந்திய பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 வயது சிறுவன் அளித்த புகாரின்பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி அனுபமா என்று தெரிய வந்துள்ளது. சந்திரசேகர் ஆஸ்லோவில் உள்ள கணிப்பொறி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
சந்திரசேகரின் மகன், பள்ளியில் ஒழுங்கீனமாக கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனை கண்டித்த சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி அனுபமா, ஒழுங்காக இல்லாவிட்டால், மீண்டும் ஹைதராபாத்திற்கே திருப்பி அனுப்பி விடுவதாகக் கூறியதாகத் தெரிகிறது.
தற்போது அந்த சிறுவன் நார்வேயில் உள்ள சிறுவர் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெற்றோர் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகவில்லை.