Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக சட்ட சபை வைர விழாவில் இந்திய அதிபர் பிரணாப்பின் நீண்டதொரு உரை

இன்று மாலை தொடங்கிய தமிழக சட்ட சபை வைர விழாவில் இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி நீண்டதொரு உரையினை நிகழ்த்தினார்.

தமிழக சட்டப்பேரவையில் பணியாற்றிய பலர் தேசிய தலைவர்களாக உருவெடுத்துள்ளனர் என தனது உரையில் தெரிவித்தார். சஞ்சீவ் ரெட்டி சி.சுப்பிரமணியம் ஆகியோர் பணியாற்றிய சிறப்பு பெற்றது தமிழக சட்ட பேரவை என தெரிவித்தார்.

தமிழ்நாடு என பெயர் மாறுவதற்கு அறிஞர் அண்ணா அவர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டார் எனவும் இந்தியாவில் முதல் முறையாக 1937 இல் விற்பனை வரி கொண்டுவந்தது தமிழக பேரவையே என்றும் தனது உரையில் தெரிவித்தார்.

சத்துணவுத் திட்டத்தை அமுல்படுத்தியத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்தது தமிழ்நாடு என்றும் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post