Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது தொடர்பான வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தின்போது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரிப்பது குறித்து சி.பி.ஐ. இயக்குனரின் ஆலோசனைப்படி செயல்படுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சி.பி.ஐ. இயக்குனருக்கும், அந்த அமைப்பின் விசாரணைப் பிரிவின் தலைவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பிரமோத் மகாஜன் இருந்தபோது, 2001 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கடந்த 2011 ஆண்டு புகார் எழுந்தது.

இதனையடுத்து, தொலைத்தொடர்பு துறையின் அப்போதைய செயலர் ஷ்யாமல் கோஷ், துணைத் தலைவர் ஜெ.ஆர். குப்தா, ஏர்டெல் மற்றும் வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை நடத்துவதில் சி.பி.ஐ. இயக்குநருக்கும் அதன் விசாரணைப் பிரிவின் தலைவருக்கும் இடையே கருத்துவேறுபாடு எழுந்தது.
[vuukle-powerbar-top]

Recent Post