நமக்கு அண்மையில் கிடைத்த தகவலின் படி, நடிகர் விஜய் "ஏ.ஜி.எஸ். என்டர்டைன்மென்ட்" பட நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் நடிக்க இருக்கிறார் என்பதாகும்.இதை உறுதி செய்துள்ளனர் "ஏ.ஜி.எஸ். என்டர்டைன்மென்ட்"பட நிறுவனத்தினர்.ஆயினும் இப்படத்தை இயக்கப்போகும் இயக்குனர் மற்றும் ஏனைய கலைஞர்கள் பற்றிய முடிவு இன்னும் எட்டப்படவில்லை.
இதுவே முதல் முறை நடிகர் விஜய்யும், "ஏ.ஜி.எஸ். என்டர்டைன்மென்ட்"பட நிறுவனமும் இணைந்து படமொன்றில் பணியாற்றுவது.அண்மையில் இப்படநிறுவனம் தயாரித்த "மாற்றான்" படம் மிக பெரிய வெற்றியை கண்டது.
2006 ஆம் ஆண்டில் இருந்து மூன்று சகோதரர்கள் "ஏ.ஜி.எஸ். என்டர்டைன்மென்ட்" பட நிறுவனத்திற்காக சேர்ந்து தயாரித்த பல படங்கள் மிக பெரிய வெற்றியை கண்டன.அதில் "திருட்டுப் பயலே" "சந்தோஷ் சுப்பிரமணியம்", மற்றும் "மதராசப்பட்டினம்" போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.
இப்போது நடிகர் விஜய் இப்பட நிறுவத்துடன் இணையும் படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.