
கடந்த சனிக்கிழமை ஓமான் நாட்டுக் கொடியுடன் இலங்கை கடற்பரப்பில் நுழைந்த தாய்வான் நாட்டு மீன்பிடிக் கப்பலில் எம்- 16 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்பட்ட வெற்று ரவைகள், இரண்டு ஆர்பிஜி எறிகணைகள் இருந்ததை இலங்கை கடற்படையினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்தக் கப்பலின் தலைவரான சீன மாலுமி கைதுசெய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு, துறைமுக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்தநிலையில், சீன மாலுமியை விடுதலை செய்யுமாறு கொழும்பிலுள்ள தூதரகம் மூலம் சீனா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.