சென்னையில் இருந்து டெல்லி சென்ற கிராண்ட் டிரன்க் (GRAND TRUNK) விரைவு தொடருந்தில் நள்ளிரவில் தீ பிடித்தது. குளிரூட்டப்பட்ட பெட்டியில் நிகழ்ந்த இந்த தீ விபத்தைத் தொடர்ந்து பயணி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு சென்னையில் இருந்து கிளம்பிய கிராண்ட் டிரங்க் விரைவு தொடருந்து, இன்று அதிகாலை 2 மணியளவில் குவாலியர் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது குளிரூட்டப்பட்ட பெட்டியில் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த மற்றொரு பெட்டிக்கும் பரவியது. தீ விபத்தை அடுத்து டெல்லி செல்லும் பல தொடருந்துகள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.