
நேற்று
முழுஅடைப்பு நடைபெற்ற நிலையில், இன்று தொடருந்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த ஏராளமானோர்
பங்கேற்றனர். அப்போது மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் ஈஸ்வரப்பா, உள்ளிட்ட பாஜகவினர் ஆளுநர் பரத்வாஜை சந்தித்து மனு அளித்தனர் .
கோலார்
தங்கசுரங்கம் அமைந்துள்ள ராபர்ட்சோன்பேட், பங்கார்பேட், சாம்பியன் ரீப்ஸ்,
ஊரகம், மாரிக்குப்பம், கௌதம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கூடங்குளம்
அணுமின்நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் யுரேனியக் கழிவுகளை
கொட்டப்போவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து நேற்று முழுவதும் முழுஅடைப்பு நடைபெற்றது.