கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து அண்மையில் இராணுவத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 109 தமிழ் பெண்களில் இராணுவத்தின் பாலியல் தொல்லை காரணமாக 3பெண்கள் அங்கிருந்து தப்பியோடி வீடுகளுக்கு வந்து சேர்ந்துள்ளனர். இவர்களை கைது செய்யும் முகமாக இராணுவத்தினர் இவர்களை தேடி வருகின்றனர்.
இன்னும் பலர் அங்கிருந்து தப்பி செல்வதற்கு முற்பட்ட போதிலும் அவர்கள் முகாம்களில் இருந்து வெளியேறாதவாறு இராணுவத்தினர் அவர்களை முகாம்களில் அடைத்து வைத்து வைத்துள்ளனர் என்றும் தப்பி வந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட தமிழ் பெண்கள் இராணுவத்தின் பாலியல் தேவைக்கு பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் அதற்கு இணங்க மறுக்கும் பெண்கள் தண்டிக்கப்படுகின்றனர் என்றும் தப்பி வந்த பெண்கள் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு கடுமையான இராணுவ பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. அதிகாலை 4மணி தொடக்கம் இரவு 10மணிவரை இராணுவத்தினர் இவர்களுக்கு பயிற்சி வழங்குவதாகவும் பயிற்சியின் போது பாலியல் தொல்லைகளை இராணுவம் புரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இராணுவத்தில் உள்ளவர்களின் பாலியல் தேவைகளுக்காகவே தமிழ் பெண்கள் இராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.