எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 500 - க்கும் மேற்பட்ட முதலாண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள் புதிய தேர்வு நடைமுறைக்கு எதிர்ப்பு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவம் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகம் தனியாக தேர்வு விதிகளை பின்பற்றுகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் தேர்வு விதிமுறையை பின்பற்றுவதில்லை என்பதே மாணவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.
எம்.ஜி.ஆர்., மருத்துவக் கல்லூரி தனியாக விதிமுறைகளை கடைபிடிப்பதால் முதலாம் ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் பாதிக்கப்படுவதாகவும், எனவே இந்த நடைமுறை திரும்பப்பெற வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.