கோவை மத்திய சிறைச்சாலையில்
காவல்துறையினர் இன்று மேற்கொண்ட திடீர் ஆய்வில் கைபேசி, கத்தி உள்ளிட்ட
பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காவல்துறை
துணை ஆணையர் சுவாமிநாதன் தலைமையில் 2 உதவி ஆணையர்கள் உட்பட 50
காவல்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். மத்திய சிறைச்சாலையின் 5
பிளாக்குகள் மற்றும் பெண்கள் சிறைச்சாலையை காவல்துறையினர் 5 குழுக்களாக
பிரிந்து சோதனை நடத்தினர்.
காலை
5 மணிக்கு துவங்கிய சோதனை 5 மணி நேரமாக நீடித்தது. சோதனையின் முடிவில் 13
கத்தி, 3 கைபேசி , 6 கைபேசி சார்ஜர்கள் உள்ளிட்ட பொருட்களும், 6
ஆயிரத்து 700 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.