இந்தியா வந்துள்ள மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் சூ கீ இன்று புதுடெல்லியில் அவர் படித்த் ஸ்ரீராம் மகளிர் கல்லூரியில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தான் இன்னும் இந்திய பிரஜையாகவே உணர்வதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தியர்கள அனைவரும் அவர்களது ஜனநாயக உரிமைகளை பெற்றுள்ளனர்.
அரசியலில் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். அரசியலுக்கு கொள்கை என்பது முக்கியமானது. கொள்கை இல்லாத அரசியலை ஊக்குவிப்பதை நிறுத்துவது நல்லது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் கொள்கை இல்லாத அரசியல் மிகவும் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.