Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காங்கோ நாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் 113 பேர் பலி

காங்கோவின் வடக்கு கிர்வ் மாகாணத்தில் உள்ள கோமாவில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் ஏற்பட்ட கலவரத்தில் 113 பேர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இறந்தவர்களின் உடல்களை மீட்ட போது அதில் 51 உடல்கள் ருவாண்டா ராணுவ வீரர்களின் உடையுடன் இருந்ததாக அந்நாட்டு அரசு செய்தி தொடர்பாளர் லாம்பிரட் மன்தி கூறியுள்ளார். இதற்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கலவரத்திற்கு காரணமான பழங்குடியினர்களை அருகிலுள்ள நாடுகளான ருவாண்டா மற்றும் உகாண்டா நாடுகள் ஆதரித்துள்ளன என்று ஐ.நா. சபை குற்றம் சாட்டியுள்ளது. இதனை அந்நாடுகள் மறுத்துள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post