Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்

பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் நேற்று நடத்திய ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டவர் 3 பேர் பலியானார்கள்.

இந்நிலையில், இஸ்ரேலின் ராணுவ பிரிவு தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை பதில் தாக்குதலை இன்று தொடுத்துள்ளது.

இந்த தாக்குதலில் காசா நகரத்தின் பல்வேறு கட்டிடங்கள் பற்றி எரிந்தன. மேலும், பதுங்கு குழிகளில் இருந்து வரும் ராக்கெட் தாக்குதல்களை சமாளிக்கும் வகையில், இஸ்ரேல் தனது தாக்குதலை தரை வழியே நடத்திடவும் இலக்கினை நிர்ணயித்துள்ளது.

ஹமாஸ் படை பிரிவின் அதிகார மையமான உள்துறை அமைச்சகம் மீதும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுவரை 350 ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவ தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.
[vuukle-powerbar-top]

Recent Post