"போடா போடி" படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஆங்கிலேயரான டங்கன் டால்போர்ட்டுடன் சிறிது உரையாடும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது.
இந்திய சினிமாக்கள் பிரித்தானிய செய்மதி அலைவரிசைகளில் மிக பிரபலம் என கூறிய அவர், "போடா போடி" மாதிரியான ஒரு படத்தில் பணியாற்றியது தனக்கு மிக சந்தோசத்தை அளிப்பதாக கூறினார்.
அத்தோடு இந்திய சினிமா இசையை தான் பெரிதும் இரசிப்பதாகவும், அதிலும் குறிப்பாக பாடகி ஆஷா போன்ஸ்லேயின் தீவிர இரசிகராக தான் இருப்பதாகவும்,அவரின் பாடல்களின் பெரிய தொகுப்பே தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்,
மேலும் சிம்பு குறித்து கருத்து தெரிவித்த அவர்,எளிதில் உணர்சிவசப்படக்கூடிய ஒரு நடிகர் சிம்பு என்றும், மிக திரைமைசாலியான நடிகை வரலக்ஷ்மி என்றும் தெரிவித்தார்.மிக விரைவில் இவர்கள் இருவருடனும் சேர்ந்து பணியாற்ற மிகுந்த ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போது ஆர்ஜென்டீனா மொழிப் படமொன்றில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிக்கொண்டுள்ளார் டங்கன் டால்போர்ட்.