கடந்த 31 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழு கூட்டத்தில், நவம்பர் 15ம் தேதி வரை தமிழகத்தின் நீர்பாசனத் தேவைக்காக 4 .05 டி.எம்.சி. தண்ணீர் தேவை என்று மத்திய நீர் வளத்துறை செயலாளர் துருவ் விஜய் சிங் கூறினார்.
அத்துடன் ஏற்கனவே வழங்கப்பட வேண்டிய 2.15 டி.எம்.சி. தண்ணீரையும் சேர்த்து, மொத்தம் 6.2 டி.எம்.சி. நீரை கர்நாடக வழங்க வேண்டும் என அவர் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், இந்த உத்தரவுபடி காவிரிநீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விடவில்லை.
இதனிடையே, கடந்த 15 நாட்களாக கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு வந்த காவிரிநீரின் அளவு குறித்த விவரங்கள் மத்திய நீர்வள ஆணையத்திடம் அளிக்கப்படவுள்ளது.