கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களை தமிழக அரசு தொடர்ந்து ஒடுக்கிக்கொண்டு வரும் நிலையில் தரை வழி முற்றுகைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இடிந்தகரை பெண் போராளிகள் மீது எல்லையில்லாமல் தமிழக அரசு வழக்குகளை பதிவு செய்து கொண்டே செல்கிறது.
அந்தவகையில் இடிந்தகரை போராளிப் பெண்களை திருச்சி பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். சுந்தரி, செல்வி, சேவியரம்மால் ஆகியோர் மீது நேற்று மீண்டும் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவர்களது வழக்கு எண்கள் ( வழக்கு எண் 31/12, 33/12) இவையே ஆகும்.
மொத்தமாக இவர்களுக்கு எட்டு வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.