"துப்பாக்கி" படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும் அப்படத்தை இதுவரை பல முறை பார்த்துவிட்டார்கள்.ஆயினும் இப்படத்தில் நாயகியாக நடித்த காஜல் அகர்வால் அண்மையிலே இப்படத்தை பார்த்துள்ளார்.
ஹைதராபாத் நகரில் உள்ள "சினிமாக்ஸ்" திரையரங்கில் இப்படத்தை பார்த்து இரசித்துள்ளார் காஜல் அகர்வால்.அவருடைய சமூக வலைத்தளத்தில் இருக்கும் அவருடைய நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் படி தன்னுடைய இடைவிடாத படப்பிடிப்புக்கு மத்தியிலும் இப்படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார் அவர்.