இலங்கை - ஜப்பான் இடையிலான இராஜதந்திர உறவின் 60 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியால் 1000 ரூபா பெறுமதியான புதிய நாணயக்குற்றி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
புதிய நாணயக்குற்றியை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் அலரி மாளிகையில் கையளித்து உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.
ஜப்பான் அரசின் கோரிக்கையின் பேரில் வெளியிடப்பட்ட இந்த நாணயக்குற்றியின் முன் பக்கத்தில் மேல் கொத்மலை நீர் தேக்க அணைக்கட்டின் தோற்றம் பொறிக்கப்பட்டுள்ளது. புதிய நாணயக்குற்றி 35.0 மில்லிமீற்றர் விட்டத்தையும் 22.0 கிராம் நிறையையும் கொண்டது.