மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் விமானநிலையம் செல்லும் சாலையில் இன்று மதியம் ஒரு குண்டு வெடித்தது.
இந்த வெடிகுண்டு விபத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவர் பலியானார்.
மற்றொருவர் படுகாயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று இம்பால் நகர போலீஸ் வட்டாரத்தில் தகவல் கூறுகின்றனர்.