
இலங்கையில் நடந்த இறுதி கட்டப்போரில் இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்களையும் சேர்த்து கொலை செய்தது என ஐ.நா.வின் மனித நேயப் பணிகளுக்கான முன்னாள் தலைவர் ஜான் ஹோம்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும் பொது மக்களை பலி கொடுத்தாவது விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தை எந்த ஒரு நாடும் தடுத்துவிடக் கூடாது என்பதில் இலங்கை மிகத் தெளிவாக இருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், அப்போதைய சூழலில் ஐ.நா. சங்கடமான ஒரு நிலையில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
ஐ.நா செய்த தவறுகள் ஒவ்வொன்றாக வெளிவரும் நிலையில் இலங்கையின் மீது அழுத்தங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.