மதுரை அருகே காய்ச்சலுக்கு இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தனர்.
அலங்காநல்லூர் அருகே ஆதனூரைச் சேர்ந்த 9-ம் வகுப்புப் படிக்கும் அஜய் என்ற சிறுவனும், மேலூரைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணியும் உயிரிழந்தனர்.
இவர்கள் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். கிசிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தனர்.
இதனையடுத்து அந்த பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஐ தாண்டியது. மேலூரைத் தொடர்ந்து அலங்காநல்லூர் பகுதியிலும் தற்போது காய்ச்சல் பரவி வருகிறது.