மத்திய மியான்மரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மேலும், இந்த நிலநடுக்கத்தினால் இராவத்தி ஆற்றின் குறுக்கே பாதி கட்டபட்ட நிலையில் உள்ள பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த பணியாளர்களை காணவில்லை. நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் மியான்மரில் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மண்டாலாய்யில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தாய்லாந்து மற்றும் அண்டைய நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
நேற்று இரவும் 5.7 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.