உச்ச நீதிமனற உத்தரவின் படி 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான மறு ஏலம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கால் ஒதுக்கப்பட்ட 122 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை துவங்கி ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில் இன்று ரத்து செய்யப்பட்ட உரிமங்களுக்கான மறு ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில், ஏர்டெல், வோடாபோன், டெலிவிங்ஸ், வீடியோகான் மற்றும் ஐடியா செல்லூலார் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.இந்த ஏலம் இன்றிரவு 7.30 மணி வரை நடைபெறும் என்று மத்திய தொலை தொடர்புத் துறை செயலாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.