இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அமித் கர்சாய்க்கு டெல்லியில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியரசு தலைவர் பிரணப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் கர்சாய்க்கு வரவேற்பு அளித்தனர். பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இரு நாடுகளக்கிடையே உள்ள உறவு குறித்து ஆலோனை நடத்துகிறார்.
உரம், இளைஞர் மேம்பாடு, சிறு மேம்பாட்டு திட்டங்கள், சுரங்கம் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் இரு தலைவர்களும் கையெழுத்திடுகின்றனர்.
கடந்த சனிக்கிழமை இந்தியா வந்த கர்சாய் முதலில் மும்பைக்கு சென்றார். அங்கு தொழிலதிபர்களுக்கு மத்தியில் பேசிய அவர், ஆப்கானிஸ்தான் தொழில் மூதலீட்டுக்கு தயாராகவிட்டதாக தெரிவித்தார்.