இயக்குனர் ஷங்கர் தன்னுடைய சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான "எஸ் பிக்சர்ஸ்" ஊடாக பல படங்களை தயாரித்துள்ளார்.அந்த வரிசையில் "காதல்","வெயில்" ,"இம்சை அரசன்" மற்றும் " ஈரம்" போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.
இவ்வளவு காலமும் படங்களை இயக்குவதிலேயே குறியாக இருந்த ஷங்கருக்கு, புதுமுக இயக்குனர் ராஜமுருகனின் கதை பிடித்துப்போக, இக்கதையை படமாக இயக்குவதற்கு ராஜமுருகனுக்கு பச்சை கொடி காட்டியுள்ளார் .
இப்படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகை பற்றிய செய்திகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.