நகைச்சுவை நடிகர் சந்தானம், தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்க இருக்கும் படம் " கண்ணா லட்டு திங்க ஆசையா".இப்படத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நபர்கள் இருவர் நடிக்கவுள்ளனர்.
சந்தானத்தின் நெருங்கிய நண்பர் சிம்பு. சந்தானம் கேட்டுக்கொண்டதன் படி, இப்படத்தில் ஒரு காட்சியில் இவர் நடிக்கவுள்ளார்.அவரோடு தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனரான கெளதம் வாசுதேவ் மேனனும் நடிக்கவுள்ளார்.
இக்காட்சியானது, நடிகர் சிம்புவை, கெளதம் வாசுதேவ் மேனன் ஒரு படத்திற்காக இயக்கிக்கொண்டிருக்கும் போது, அங்கு வரும் " பவர் ஸ்டார்" ஸ்ரீநிவாசன்,கெளதம் மேனனின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்பதாக அமைந்துள்ளது.
தமிழ் இரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை இக்காட்சி பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.