அண்மையில் சூர்யா நடிப்பில் வெளிவந்த "மாற்றான்" படத்திற்கு மக்களிடையே கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து,தற்போது சூர்யா நடித்துக்கொண்டிருக்கும் இயக்குனர் ஹரியின்,"சிங்கம் 2 ", மற்றும் கெளதம் வாசுதேவ் மேனனின்,"துப்பறியும் ஆனந்தன்" ஆகிய படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இதற்கிடையே மற்றுமொரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது சூர்யா பற்றி வந்துள்ள அண்மித்த செய்தி ஓன்று.அதாவது "சுந்தரபாண்டியன்" வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசிகுமாரின் இயக்கத்தில் நடிக்க நடிகர் சூர்யா ஆசைப்படுவதாகவும், இது குறித்து இருவரும் ஆலோசித்துள்ளதாகவும் அச்செய்தி தெரிவித்துள்ளது.
இருவரும் இணையும் படம் பற்றிய செய்திகள் உத்தியோகபூர்வமாக வெளிவராத பட்சத்தில்,இவை பற்றிய மேலதிக விபரங்களுக்கு அலை செய்திகளின் திரைகடலுடன் இணைந்திருங்கள்.