நடிகை திரிஷாவின் தந்தை கிருஷ்ணன் மாரடைப்பால் நேற்று மாலை உயிரிழந்தார்.இறக்கும்போது அவருக்கு வயது 68 . ஹைதரபாத் நகரில் ஒரு பிரபல ஹோட்டல் ஒன்றில் முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்றி வந்த அவருக்கு நேற்று மாலை பயங்கர நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரை ஹைதராபாத் நகரில் உள்ள யசோதா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆயினும் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக வைத்தியசாலை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
தந்தை இறந்த செய்தி கேட்ட, நடிகை திரிஷா,மற்றும் அவரது தாயார் உமா ஆகியோர் உடனடியாக ஹைதராபாத் நகருக்கு விரைந்துள்ளனர்.
தந்தையை இழந்து வாடும் திரிஷா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அலை செய்திகள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.