
கிருஷ்ணகிரி மாவட்ட நில அளவையர்கள், மதுரையில் உள்ள கிரானைட் குவாரிகளை அளவிடும் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளதே இந்த தாமதத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 163 குவாரிகளில் 50 க்கும் மேற்பட்ட குவாரிகளில் ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளன.
நவீன கருவிகள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ள தகவல்களை அளவிட நில அளவையர்கள் இல்லாத நிலை உள்ளது.
எனினும் விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் பூஜா குல்கர்னி தெரிவித்துள்ளார்.
வாரம் ஒருமுறை ஆய்வறிக்கை அரசுக்கு அளிக்க திட்டமிட்டிருந்த நிலையில் இதுவரை ஒரு முறைகூட அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.