திராவிடர்களின் ஆதிக்க , அதிகார சுரண்டலுக்கு எதிராக முன்னெப்பொழுதும் இல்லாத அளவு தமிழ் மக்களிடையே காணப்படும் பரவலான எழுச்சி, தமக்கான ஆட்சியை தாமே நிரவ முயன்று வரும் இச்சூழலில், இதை சற்றும் எதிர்பார்க்காத திராவிடர்கள் " தமிழர்கள்" , தமிழ் மொழி மீதான நலன்" என்று தாங்கள் அணிந்திருந்த போலி மூகமூடியில் இருந்து செய்தவரியாது மெல்ல வெளிபடுகின்றனர்.
இத்தனை காலம் சுரண்டலில் ஈடுபட்டவர்கள் மக்களின் மாறிவரும் மனநிலையை பொறுக்காமல், தமிழ் மொழிக்கும் , மக்களுக்கு எதிராகவும் அவதூறில் ஈடுபடும் போது சில விடயங்களை பொதுவெளியில் நாமும் பேசுவது தவிர்க்க முடியாதது.
தந்தை பெரியாரின் முக்கிய குறிக்கோளான தமிழ் மக்களிடையே சமத்துவம், சாதி ஒழிப்பு, சமூக நீதி என்பதற்கான முன்னெடுப்புகளை விடுத்து தமிழ் சாதிகளிடையே வெறுப்பும், மறைமுக சாதி ஊக்குவிப்புகளும் சில ஆதிக்க, அதிகாரத்தில் உள்ள தெலுங்கு சாதி வெறியர்களால் பதவி ஆசைக்காக தொடந்து கடைபிடிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
தமிழர் ஆட்சி என்று யாரேனும் தமிழர் ஒருவர் சொல்ல ஆரம்பித்தால் அவரையும், அவரின் சாதியையும், உட்பிரிவையும் சொல்லி அதை ஒரு சாதிய கூட்டமாக குறுக்கும் போக்கும், மற்ற தமிழ் சாதிகளின் மத்தியில் வெறுப்பை உண்டாக்கி சாதி துவேசத்தை உண்டாக்கிய வண்ணம் உள்ளார்கள்.
பெரியாரின் கோட்பாடுகளைய, கொள்கைகளையோ பின்பற்றாத இன்றைய திராவிட ஆதிக்க அமைப்புகள், தமிழர் உரிமை என்று கோரும்போது மட்டும் பெரியாரை முன்னிறுத்தி தமிழருக்காக போராடிய அவரை தெலுகு, கன்னட திராவிட ஆதரவாளர்களாக காட்டிக்கொள்ள முற்படுகின்றனர்.பல தெலுகு நாயக்கர், நாயுடு சாதி சங்கங்களில் தந்தை பெரியாரையே சாதி தலைவராக சங்கங்களின் முன்னோடியாக காட்டும் அளவு அது வந்து நிற்கிறது.
சமீபத்தில் “நாம் தமிழர்” என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சி வெளியிட்ட ஆவணத்தை சல்லடை போட்டு அலசி , தமிழர்களுக்கான அரசியல் தோன்றிவிட கூடாது என்பதற்காக பெரியாரை முன்னிறுத்தி, பெரியாரின் பெயரால் தொடந்து பொய் பரப்புரை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.
இன்னும் ஓட்டரசியலில் களம் கண்டு ஒரு வார்டு மெம்பெர் பதவி கூட பெறாத ஒரு கட்சிக்கு ஒட்டுமொத்த திராவிடர்களும் ஒன்று கூடி எதிர்க்க வேண்டியதன் உங்கள் நோக்கம் என்ன ???
தவறான நபர், தவறான கொள்கைகளை உடைய ஒரு நபர் அரசியல் தோன்றுவதை தடுக்கின்றோம் என்று உங்களின் கூற்று உண்மை எனில் அது வரவேற்க்கப்பட வேண்டியதுதான்..உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமேயானால் திராவிடத்தின் பெயரால் கோமாளி அரசியல் செய்யும் விஜயகாந்த் என்பவரின் கட்சிக்கு உங்களின் இத்தனை ஆராய்ச்சிகள், கொள்கை அலசல், அரசியல் எதிர்ப்பு எங்கே போயிற்று ??
பெரியாரின் கொள்கைககளை நீங்கள் காப்பது உண்மையானால், பெரியாரின் படத்திற்கு சாம்ப்ராணி , ஊது வத்தி காட்டி கும்பிட்டு சாதி அரசியல் செய்யும் அவருக்கு எதிரான உங்கள் எதிர்ப்பு எங்கே போயிற்று ???
விஜயகாந்த் நாயுடு என்று சொல்லி தமது சமூதாய மக்களின் பொருளாதரத்தை பெற்று திராவிடர் என்பதனால் குறுகிய காலத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவராக கோலோச்சும் அவரை ஏன் நீங்கள் எதிர்பதில்லை..திராவிடர் என்பதாலா ?
2009 -ம் ஆண்டு ஈழ படுகொலைக்கு பின் ஆரம்பித்த தமிழ் தேசியம் என்று பலர் திராவிடர்கள் எள்ளி நகையாடி வருகின்றனர்.தமிழ் தேசியத்திற்காக நீண்ட நெடிய
போராட்டங்களை அந்தந்த காலகட்டத்தில் தமிழ் தேசியவாதிகள் முன்னேடுதிருக்கின்றனர், தோழர் சுபா. தமிழரசனின் ஆயுத போராட்டம் வரை அது களம் கண்டுள்ளது.
திராவிட, ஆரியர்களின் ஊடக ஆதிக்கத்தில் தொடந்து தமிழர்களின் வரலாறு திரிக்கப்பட்டு,ஒடுக்கப்பட்டு வருகிறது.
எம் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு கொண்டிருந்த வேளையில், தமது நாட்டு தமிழர்களுக்காக என்று கூட வேண்டாம் பக்கத்தில் அப்பாவி மனித உயிர்கள் என்றும் பாராமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கைகட்டி நகைப்போடு வேடிக்கை பார்த்த ஆரிய இந்திய அரசையும், திராவிட ஆட்சியையும் 2009 -ம் ஆண்டுக்கு பிறகு ஒருவித பயம்கலந்த பார்வையிலே தமிழ்நாட்டு தமிழர்கள் அணுகி ஒதுக்கி வருகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.
பர்மாவில்,மராத்தியத்தில் , கர்நாடகாவில், தொடந்து தமிழக கடற்கரையில் கொல்லப்பட்டு கொண்டிருக்கும் தமிழன், வீரப்பன் தேடுதல் வேட்டையின் பொது கர்னாடக அதிரடிப்படையால் சீரயிக்கபட்டு, கொல்லபட்ட தமிழர்கள், மலேசியா, சிங்கப்பூர், மணிப்பூரில் போன்ற பல்வேறு நாடுகளில் உரிமைகளுற்ற வாழும் தமிழர்கள் ............
இப்படி உலகெங்கிலும் துன்பப்படும் தமிழர்களுக்கு அரணாய் இருந்து காக்க வேண்டிய தாய் தமிழகம் இந்திய ஆரிய சிறையிலும் , இல்லாத திராவிடத்தின் சிறையிலும் அகப்பட்டு கிடக்கிறோம்..
இன்றைக்கே நீ யெழுதல் இல்லையெனில்
இனியடுத்து வரப்போ கின்ற
என்றைக்கும் தமிழா,
நீ எழப்போதல்
இல்லையென எண்ணிக் கொள்வாய்
அன்றைக்குப் போனதடா நின்னுரிமை
நின்பெருமை,
அனைத்தும் வாழ்வும்
என்றைக்குச் சிறப்பாயோ ? நந்தமிழ்த்தாய்க்
குலகநிலை ஏற்று வாயோ ?
என்ற பெருந்தமிழர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவு நாளில்
தமிழ் தேசியத்திற்காக நாம் களமிறங்கும் நேரமிது …
நம்மில் இருக்கும் சிறு சிறு பூசல்களைக் புறந்தள்ளிவிட்டு தமிழர் தேசியம் காண கரம் கோர்ப்போம்!
நன்றி : சுப்பு மணி