Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com
Showing posts with label ஆய்வுக்கட்டுரை. Show all posts
Showing posts with label ஆய்வுக்கட்டுரை. Show all posts

பறையர்களுக்கு இறையிலி நிலம் வழங்கியவர் இராஜராஜ சோழர் - கல்வெட்டு ஆய்வு



பறையர்களுக்கு இறையிலி நிலம் வழங்கியவர் இராசராசச் சோழர்! - ம.செந்தமிழன்

இராஜராஜச் சோழர் காலம் குறித்த எனது கட்டுரையின் ஒரு பகுதி இது.

2010 ஆம் ஆண்டு, ‘இராசராசச் சோழர் – ஓர் தமிழிய ஆய்வு’ எனும் சிறு நூலாக அக்கட்டுரையின் தொகுப்பு வெளியானது. பொதுவாகவே, பிற்காலச் சோழர் காலம் குறித்து இன்று விவாதிக்கப்பட்டு வரும் கருத்துகள், சில ஆய்வாளர்களின் நூல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. குறிப்பாக திரு.நீலகண்ட சாஸ்திரியின் நூல்தான் பிற்காலச் சோழர்கள் குறித்த இன்றைய பல கருத்துகளுக்கு ஆதாரமாக உள்ளது.
’பிற்காலச் சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு ஒரு பெரும் வாழ்வு இருந்தது’ என்ற கருத்தைப் பரப்பும் நோக்கத்தை திரு.நீலகண்ட சாஸ்திரியின் அணுகுமுறையில் காண முடிகிறது. தமிழகத்தில் பிராமணர்களுக்கென நீண்ட நெடிய வரலாறு இருப்பதாகவும், அந்த வரலாறும் மதிப்பும் மரியாதையும் மிக்க வரலாறுதான் என்பதாகவுமே, பிராமணிய சார்பு ஆய்வுகள் தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றன. இந்த ஆய்வுகளை அப்படியே பின்பற்றியதன் விளைவுகளில் ஒன்றாக, ’தமிழர்கள் வரலாறு பிராமணர்களுக்கு அடிமைப்பட்ட வரலாறுதான்’ என்ற நம்பிக்கை கடந்த நூற்றாண்டில் ஏற்பட்டது.

எனது கட்டுரைகள், மூலச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டவை. ஏதேனும் ஓர் ஆய்வாளரது கருத்துகளைச் சான்றாகக் காட்டினாலும், அவரது ஆய்வுகள் மூலச் சான்றுகளின் அடிப்படையிலானவையா அல்லது அவரது ஊகங்களை அடிப்படையாகக் கொண்டவையா எனப் பிரித்தறிந்து எழுதப்பட்டுள்ள கட்டுரை இது.

மூலச் சான்றுகள் என்பவை, கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற வரலாற்றின் சமகாலச் சான்றுகள். 

அந்த வகையில் சில கல்வெட்டுச் சான்றுகளைக் கண்போம்.
“உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் தஞ்சாவூர் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீச்வரம் உடைய பரமஸ்வாமிக்கு வேண்டும் நிவந்தங்களுக்குத் தேவதானமாகச் சோழமண்டலத்து புறமண்டலங்
களிலும் உடையார் ஸ்ரீ இராஜராஜதேவர்
குடுத்த ஊர்களில், ஊர்நத்தமும் ஸ்ரீ
கோயில்களும் குளங்களும்ஊடறுத்துப்போன வாய்க்கால்களும்
பறைச்சேரியும் கம்மாணசேரியுஞ்
சுடுகாடும் உள்ளிட்டு
இறைஇலி நிலங்களும்...’
(இராஜராஜேச்சரம்,
முனைவர் குடவாயில்
பாலசுப்ரமணியன் /2010/ பக் 426)


தஞ்சைப்பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் மேற்கண்ட கல்வெட்டும் ஒன்று. இக் கல்வெட்டு கூறும் சேதி, ’இராசராச சோழன் பெருவுடையார் கோயிலுக்கான தேவதான நிலங்களாகக் கொடுத்த ஊர்களில் பறைச்சேரியும் கம்மாள சேரியும் உண்டு. மேலும் இந்தச் சேரிகளுக்கான நிலங்கள் இறையிலி நிலஙகள் ஆகும். அதாவது, பறைச் சேரி, கம்மாளச் சேரி மக்கள் அனுபவிக்கும் நிலங்களுக்கு அரசின் வரி விதிப்பு இல்லை. 
அடுத்த கல்வெட்டு,

’சோழச் சருப்பேதிமங்கலம் ஆயிரம் பிராமணர்க்கு பங்கெழுதி கூறிட்டுக்கொள்கவென்று திருமுகப் பிரசாதஞ்செய்தருளி சம்கரித்து கூறிட்டமையில்.....இவ்வூர் பங்கெழுதி கரை பறித்து கையோலை வாங்கின...’

(சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் / முனைவர் மே.து.ராசுகுமார் /2004/ பக் 152, 153)

மேற்படி கல்வெட்டின் முழுமையான வரிகள் காட்டும் பொருள், பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் அவர்களது முழு உரிமைக்கு விடப்படவில்லை. மாறாக, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை கரையோலை முறையில் இடம் மாற்றி வேறு இடம் தரப்பட்டது.’ இதன் மூலம் பிராமணர்கள் குறிப்பிட்ட நிலத்தின் மீது சொந்தம் கொண்டாடும் முறை தடுக்கப்பட்டது. 

களப்பிரர், பல்லவர் காலத்தில் சதுர்வேதிமங்கலங்கள் பிராமணர்களுக்கு முற்றும் முழுதான உரிமை உடையனவாக வழங்கப் பட்டன. மேலும் அந்த நிலங்கள் இறையிலி நிலங்கள் ஆகும். அங்கே அரசனின் ஆணை செல்லாது. அந்நிலங்களுக்காக பிராமணர்கள் வரி செலுத்தவும் தேவையில்லை. இந்த நிலையை மாற்றியது சோழர் காலம்.
அடுத்த சான்றைக் காண்போம்.

“சோழ நாட்டு வளமான விளைநிலங்களின் பெரும்பகுதி, பிராமணர்களுக்குக் கொடையளிக்கப்பட்டிருந்தது என்பது உண்மைக்கு மாறானதாகும். சோழநாட்டுக் கல்வெட்டுகளில் கிடைத்த 1300 ஊர்ப் பெயர்களை வைத்துப் பார்க்கும்போது, 250 ஊர்களே பிராமண ஊர்களாக இருந்திருக்கின்றன. இது 19.25% மட்டுமே. கோயில் மற்றும் பிராமணர் கொடை தொடர்பான பதிவுகளே கல்வெட்டுகளில் பெரிதும் இருக்கின்றன. எனவே, கோயில் கல்வெட்டுகளில் பதியப்படாத வேளாள ஊர்களையும் கணக்கில் கொண்டால், இந்த அளவு இன்னும் குறைவாகவே இருக்கும்” (மேலது நூல் / பக் 214,215)
என்கிறார் ஆய்வாளர் மே.து.ரா. 
கொடை யளிக்கப்பட்ட மொத்த ஊர்கள் 1300ஐயும் கல்வெட்டுச் சாசனப்படி ஆய்ந்த பின்னர் எடுக்கப்பட்ட முடிவு இது.

பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் மேலும் ஒன்றைக் காண்போம்.
“கேரளாந்தகன் திருவாயில் மெய்காப்பாளர், இராசராசன் திருவாயில் மெய்காப்பாளர், அணுக்கன் திருவாயில் மெய்காப்பாளர்” என்ற கல்வெட்டு வரிகள் உணர்த்தி நிற்கும் சேதி,
“தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் சொத்துக்களை 118 ஊர்களில் ஊருக்கு ஒரு மெய்க்காப்பாளர் என்ற முறையில் நிர்வகித்து வந்தனர். இவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த ஊர் மக்களுக்கே விடப்பட்டது. இக் கல்வெட்டை ஆய்ந்த முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் பின் வருமாறு வியந்து உரைக்கிறார்;

“தஞ்சைப் பெருங்கோயிலின் சொத்துகள் எவற்றையும் மன்னனது படையினரோ அல்லது அலுவலரோ பாதுகாக்கவில்லை. நூற்றுப் பதினெட்டுக்கும் மேற்பட்ட சோழ மண்டல ஊர்மக்களே பாதுகாத்தனர் என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும். மக்களாட்சி நெறிக்கு இதனினும் சிறந்த சான்றொன்று இருக்க முடியாது’ (இராஜ ராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/பக் 432)

இராசராசச் சோழர் குறித்த முக்கியமான வெளிநாட்டவர் ஆய்வுகளை மேற்கோள் காட்டும் ஆய்வாளர் பாமயன், “களப்பிரர், பல்லவர் காலத்தில் வளர்க்கப்பட்ட பிராமண ஆதிக்கப் பிரமதேய முறையை மாற்றி அமைத்துத் தமிழ்க் குலத்தவருக்கு நிலங்கள் வழங்கவே, கோயில்களைப் பொருளியல் மையங்களாக மாற்றினார் இராசராசன்” என்கிறார். ஜப்பானியத் தமிழ் அறிஞர் நொபுரு கராசிமா, சோழர் காலத்தில் பிராமணர்களின் தனியார் நிலங்களும் பிரமதேயங்களும் கோயில்களுக்கு மாற்றப்பட்டன என்று கூறியுள்ளதைப் பாமயன் தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். (வேளாண்மையை விரித்த வேந்தன் / பாமயன் / தமிழினி, 2010 அக்டோபர்)

இது மிக முக்கியமான பார்வை ஆகும். தனியார் சொத்துகள் வரம்பு மீறும்போதும் ஊழல் மிகும்போதும் அச்சொத்துகளை அரசுடைமை ஆக்கும் வழக்கம் இன்று உள்ளது. இதே போல் பிராமணரின் தனியார் சொத்துகளையும் பிரமதேய சொத்து களையும் கோயிலுக்கு மாற்றி விடுவதும் அரசுடைமையின் அக்கால வடிவம்தான்.

அடுத்து, வேறு ஒரு கல்வெட்டைக் காண்போம். இதுவும் அதே தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் உள்ள கல்வெட்டுதான். ஆனால், விஜயநகர அரசர் காலக் கல்வெட்டு.

இக்கல்வெட்டு, மகா மண்டலேசுவரன் திருமலை ராயனுடையது.’தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த பிரமதேய கிராமங்கள் சிலவற்றை வரி இல்லாத நிலங்களாக மாற்றி ஆணை பிறப்பித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது’ ((இராஜ ராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/பக் 432)

இதன் பொருள் என்ன? விஜயநகர அரசர்கள் தஞ்சையை ஆளும் வரை, பிராமதேய கிராமங்கள் வரி செலுத்த வேண்டிய வையாகவே இருந்தன என்பதுதானே! விஜய நகர, நாயக்கர் அரசுகள் பிராமண அடிவருடி அரசுகள் என்பதை ஏறத்தாழ எல்லா வரலாற்றாசிரியர்களும் ஒப்புக் கொள்கின்றனர். இவ்வரசுகளே, பிற்காலச் சோழர் காலத்துக்குப் பின்னர் தமிழகத்தை ஏறத்தாழ 400 ஆண்டுகள் ஆட்சி செய்தன.

களப்பிரர்கள் பற்றியும் தமிழகத்தில் உண்மைக்கு மாறான கருத்து நிலவுகிறது. கள்ளப்பிரர் காலம் பிராமண ஆதிக்கத்துக்கு எதிரானது எனப் பல நம்புகின்றனர். ஆனால், மூலச் சான்றுகள் இந்த நம்பிக்க்கைக்கு மாறான தகவல்களை வைத்துக் கொண்டுள்ளன.

இதைப் பற்றிய களப்பிரர் காலக் கல்வெட்டு ஒன்றைக் காண்போம். பூலாங்குறிச்சி கல்வெட்டு என்று அதற்குப் பெயர். அக்கல்வெட்டுகளின் சிலவரிகளைக் காணலாம்;
.....(ழவரும்) ரு...ங் கூடலூரு நாட்டுப் பிரமதாயஞ் சிற்றையூருப் பிரம்ம தாயக்கி
....(ழமை)யும் (மீயா)ட்சியுங் கொண்டாளும் மவூருப் கடைய வயலென்னும்
....புலத்தவன் விற்றுக் கொடுத்த புன்செ நிலனு
....துப் பிரமதாயத்துப் பிரமதாயக் கிழவரா(ன)
....வரு குடிகளையும்...டையாரும் பிரம்மதாய முடையாருந் நாடு காப்பாரும் புறங்காப்

-இக்கல்வெட்டுகள் வெள்ளேற்றான் மங்கலம், சிற்றையூர் ஆகிய பிரமதேய கிராமங்களைப் பற்றிக் குறிப்பிடு கின்றன. இந்த பிரமதேய நிலங்களைப் பெற்றுக் கொண்ட பிராமணர்களைப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள்,’பிரமதேய கிழார்கள்’ என்கின்றன.

சில குறிப்புகள்:

’சேரி’ என்பது, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதி என்ற இன்றைய கருத்துக்கும் வரலாற்றுக்கும் தொடர்பில்லை. ’சேரி’ என்றால், குறிப்பிட்ட சமூகத்தினர் சேர்ந்து வாழும் இடம் என்றுதான் பொருள். அந்தவகையில் ‘பறைச்சேரி, கம்மாளச் சேரி, பள்ளுச் சேரி’ மட்டுமல்ல, ‘பார்ப்பனச் சேரி’களும் சங்க இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் நிறையவே உண்டு. புகார்ப் பட்டிணத்தில் ‘யவனச் சேரி’கள் இருந்தன. ’யவனர்’ என்றால் கிரேக்கர்களைக் குறித்த சங்கத் தமிழ்ச் சொல். 

தஞ்சைப் பெருவுடையார் கோயில் சொத்துகளை பிராமணர்கள் அனுபவித்தனர் என்றும் பொத்தாம் பொதுவாகப் பேசப்பட்டு வருகிறது. பின்வரும் பட்டியல் பெருவுடையார் கோயிலின் ஆக்கம் மற்றும் நிர்வாகக் குழுவினரை வரிசைப்படுத்துகிறது.

1. மாமன்னன் இராசராசன்
2. வீரசோழன் குஞ்சரமல்லன் எனும் ராசராசப் பெருந்தச்சன் எனும் தலைமைக் கட்டிடக் கலைஞர்.
3. மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன் (இரண்டாம் நிலைக் கட்டிடக் கலைஞர்)
4. இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் (இரண்டாம் நிலைக் கட்டிடக் கலைஞர்)
5. மாமன்னனின் தமக்கை குந்தவைப் பிராட்டியார்.
6. சேனாதிபதி கிருஷ்ணன் இராமன் என்னும் மும்முடிச் சோழப் பிரம்மராயன்.
7. ஸ்ரீகாரியம் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் (கோயிலின் நிர்வாக அதிகாரி)
8. ஈசான சிவபண்டிதர் எனும் இராஜகுரு
9. இராசேந்திர சோழன்
10. சைவ ஆசாரியார் பவனபிடாரன் (தலைமை குருக்கள்)
11. கல்லில் எழுத்து வெட்டுவித்த சாத்தன்குடி வெள்ளாளன் இரவி பாளுருடையான்

ஆறாம் இடத்தில் குறிப்பிடப்படும் பிரம்மராயன் மட்டுமே, பிராமணர். கோயிலின் மதில் சுவரைக் கட்டுவிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டிருந்ததாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. கோயில் நிர்வாகத்தில் இவருக்கு எந்தப் பொறுப்பும் இருந்ததற்கான தடயங்கள் இல்லை. மேலும் இவர், இராசராசரின் தளபதிகளில் ஒருவராக இருந்தவர். 
பெருவுடையார் கோயில் நிர்வாகம் தமிழ்க் குலத்தவர்கள் நிர்வாகத்தில் மட்டுமே இருந்தது. பவனபிடாரன் என்பவர் சிவனிய அறிவாளராக இருந்திருக்க வேண்டும். பிடாரன் என்றால், தேவாரம் பாடுவோரைக் குறித்தது. இவரே பெருவுடையார் கோயிலின் தலைமை குருக்கள்.
’பிராமணர் ஆதிக்கத்தில் கோயில் இருந்தது, சமஸ்கிருத மந்திரங்கள்தான் ஓதப்பட்டன’ என்பது போன்ற கதைகளைக் கல்வெட்டுகள் மறுக்கின்றன. 

இராசராசச் சோழரின் அரச ஆலோசகர் ஈசான சிவ பண்டிதரும் தமிழ்க் குலத்தவர்தான். ஆகவே, ’பிராமணர்களின் சதி ஆலோசனைகளைக் கேட்டு சாதிக் கொடுமைகள் செய்தார் இராசராசர்’ எனும் கதைகளும் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளால் தூக்கி வீசப்படுகின்றன.

- செந்தமிழன் மணியரசன்

தொடரும் பேஸ்புக் கைதுகள்: கேள்விக்குறியாகும் அடிப்படை உரிமையான 'கருத்துரிமை'!

 பேஸ்புக் கைது குறித்து இணையதளம் ஒன்று வெளியிட்டிருக்கும் கருத்துப்படம்.                                                                                                                                        
கடந்த நவம்பர் 19-ம் தேதி சிவசேனா கட்சித்தலைவர் பால் தக்கரே குறித்து சமூக வலைப்பதிவில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நடவடிக்கைக்கு முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டு, அவர்களை கைது செய்த காவல்துறையினர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 

பேஸ்புக்கில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சித்தலைவர் ராஜ் தாக்கரே குறித்து கருத்து பதிவு செய்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர் கொடுத்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கையை எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும் குறித்த நபரின் பேஸ்புக் கணக்கு திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையிலேயே இப்புதிய கைது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இவ்விவகாரங்களை அடுத்து 66(A) எனும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை திருத்தி அமைப்பதற்கு மத்திய அரசு யோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இனிமேல் இவ்வாறு சமூகவலைத்தளங்களில் கருத்து பகிர்பவர்கள் மீது எவரும் புகார் அளித்தால், DCP தரத்தில் உள்ள அதிகாரி அல்லது IG தரத்தில் உள்ள அதிகாரி கவனத்திற்கு அதை கொண்டுவந்த பின்னர் அவருடைய அனுமதியின் பெயரிலேயே புகாரை பதிவு செய்ய வேண்டுமென கிராமப்புற மற்றும் மெட்ரோ காவல்துறை நிலையங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

குறித்த அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைக்காவிடின், எந்தவொரு புகாரையும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டாமென இதன் மூலம் காவல்நிலையங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இனிவரும் காலத்தில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் பதியப்படும் எந்தவொரு புகார் தொடர்பிலும் உடனடியாக கூடுதல் கவனம் செலுத்த முடியுமென மத்திய அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

IT Act 66A எனப்படும் தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஷிரேயன்ஸ் சிங்கால் என்பவர் பொதுநலன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கின் கீழ் IC Act 66(A) அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதா என்பதை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையின் போது, 'இப்படியான சட்டப்பிரிவை எதிர்த்து ஏன் எவருமே பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யவில்லை' என தலைமை நீதிபதி விமர்சித்திருந்தார். 

இந்நிலையில் இத்தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள், சமூக வலைத்தள பாவணையாளர்கள் தொடர்ந்து அழுத்தம் பிரயோகித்து வருகின்றனர். 

நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை விமர்சித்து எழுதிய நபர் கைது செய்யப்பட்டமை, பாடகி சின்மயி மீது அவதூறு பரப்பியதாக இருவர் கைது செய்யப்பட்டமை, கார்டூனிஸ்ட் திரிவேதி, பேராசிரியர் அம்பிகேஷ் மகாபாத்ரா ஆகியோர் கேலிச்சித்திரம் வரைந்தமைக்காக கைது செய்யப்பட்டமை, தற்போது பால் தாக்கரே, ராஜ் தக்கரே ஆகியோரை பேஸ்புக்கில் விமர்சித்ததால் இடம்பெற்ற கைதுகள் என இவை அனைத்துமே குறித்த 66(A) IT Act சட்டப்பிரிவின் கீழ் தான் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இணைய தளங்கள் மற்றும் தகவல் நுட்ப புகார்களின் மீது அரசு தொடர்ந்து இதுபோன்ற மோசமான நடவடிக்கை எடுத்து வருவதை பார்க்கும்போது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தெரிவித்திருக்கும் அடிப்படை உரிமையான பேச்சுரிமை, கருத்துரிமை கேள்விக்குள்ளாகிறது என்பதே நம் கருத்து.

படம் நன்றி:santabanta
\

மின்வெட்டு பிரச்சனையா ....இன்றே சூரிய மின் ஆற்றலுக்கு மாறுங்க!



மின்வெட்டு பிரச்சனையா ..இன்றே சூரிய மின் ஆற்றலுக்கு மாறுங்க !

'மின்வெட்டு  பிரச்னை, விரைவில் தீர்ந்துவிடும்' என்கிற நம் நம்பிக்கைதான், தீர்ந்துகொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்று ஆரம்பித்தது... இன்று 12 மணி நேரம்... 16 மணி நேரம்... 18 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டே போகிறது. 'இனி, அரசாங்கத்தை நம்பி பலனில்லை' என்று உணர்ந்த ம
க்கள், 'இன்வர்ட்டர்'களை வாங்கினார்கள். ஆனால்
, அந்த இன்வர்ட்டரில் சேமிக்கும் அளவுக்கான மின்சார சப்ளைகூட இல்லாத நிலையில், அதுவும் பல வீடுகளில் பயனற்றுக் கிடக்கிறது.

மாற்று வழியாக, சூரிய ஒளி மூலம் அவரவர் வீடுகளுக்கான மின்சாரத்தை அவரவர்களே தயாரித்துக் கொள்ளும் சோலார் முறையை அரசாங்கம் பரிந்துரைத்து, மானியமும் வழங்குவதாக அறிவித்திருப்பது உருப்படியான யோசனை. இதையடுத்து, அங்கொன்று... இங்கொன்று என்று சில வீட்டு மாடிகளில் மின்னுகின்றன சோலார் தகடுகள். 'பவர் இருந்தாலும் இல்லைனாலும் எங்க வீட்டுல பிரச்னை இல்லைங்க...’ என்று அதை உபயோகிப்பவர்கள் சர்டிஃபிகேட் தருகிறார்கள். மக்கள் மத்தியில் சோலார் பிளான்ட் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை பற்றிய விழிப்பு உணர்வு பெருக ஆரம்பித்திருக்கும் நிலையில், அதுகுறித்த விவரங்களைப் பெற, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அலுவலகத்துக்குப் படையெடுத்தோம். அங்கே நம்மை எதிர்கொண்ட துணைப் பொதுமேலாளர் (சூரிய சக்தி அறிக்கை பிரிவு) சையத் அகமத், நமக்கு விளக்கங்களைத் தந்தார்.

''மின்பற்றாக்குறை பற்றிய புலம்பல்கள், புகார்களைவிட... மாற்று ஏற்பாடுகளுக்கு மக்கள் தயாராக வேண்டிய சூழல் இது! பூகோள அமைப்பின் சாதகத்தால், தமிழ்நாட்டில் சூரிய சக்தி அதிகளவில் கிடைக்கிறது. அதைக்கொண்டு மின்சாரம் பெறுவது நல்ல யோசனை. மக்களிடம் அந்த முயற்சியை முன்எடுப்பதற்கான தயக்கம் இருப்பதற்குக் காரணம்... அதற்கு தேவைப் படும் அதிகப்படியான ஆரம்ப கட்ட முதலீடுதான். அதனால்தான் மத்திய அரசாங்கம் அதற்கு அதிகபட்சம் 40 சதவிகிதம் வரை மானியம் வழங்க முடிவெடுத்துள்ளது.

ஒரு நாளைக்கு 4 டியூப் லைட், ஒரு மின் விசிறி, ஒரு டி.வி, ஒரு ஏ.சி, ஒரு கம்ப்யூட்டர், சிறிது நேரம் மின் மோட்டார் என மின் சாதனங்களை சுமார் 12 மணி நேரம் பயன்படுத்த, 1 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதை சூரியஒளி மூலம் பெறுவதற்கு சோலார் தகடுகள் மற்றும் பேட்டரி என அமைப்பதற்கு சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். மானியமாக 81 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மீதமுள்ள 1.19 லட்சத்தை நீங்களே செலவு செய்ய வேண்டும்.


பேட்டரி இல்லாமல் நேரடியாக மின்சாரம் பெற்று உடனுக்குடன் பயன்படுத்தும் வகையிலான சாதனத்தை அமைப்பதற்கு 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். லட்சங்களில்தான் அமைக்க வேண்டும் என்பதும் இல்லை. ஒரு ஃபேன், ஒரு லைட் என்று மின்சாரத் தேவையை சுருக்கிக் கொண்டால்... குறைந்தபட்சம் 20 ஆயிரத்தில் இருந்து சோலார் தகடுகள் அமைக்கலாம். கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகபட்சமாக 100 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதற்கான சோலார் தகடுகள் அமைக்க 1.8 கோடி செலவாகும். மானியத் தொகையாக அதிகபட்சம் 72 லட்ச ரூபாய் கிடைக்கும்.

தற்போது... வீடுகளுக்கு சோலார் மின்இணைப்பு பொருத்தியிருக்கும் 189 பேர், எங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். இவர்களில் சிலருக்கு மானியம் வழங்கவும் ஆரம்பித்துவிட்டோம். எனவே, நீங்களும் விரையுங்கள்...'' என்ற சையத், மானியம் பெற விண்ணப்பிக்கும் முறையையும் விளக்கினார்.

''சோலார் பிளான்ட்டை வீடுகளில் ஏற்படுத்தித் தர, இதுவரை 90-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளோம். இந்நிறுவனங்களை மக்கள் அணுகலாம். அவர்கள் மக்களின் விண்ணப்பங்களை எங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். மானியத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதித் தொகையை மட்டும் இவர்களிடம் செலுத்தினால் போதும். மானியத்தொகையை அவர்களிடம் நாங்களே செலுத்திவிடுவோம். மானிய அறிவிப்புக்கு முன்னதாக தாங்களாகவே சோலார் பிளான்ட்டை வீட்டில் நிறுவியிருப்பவர்கள், எங்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அதை செயல்படுத்தியிருந்தால் அவர்களுக்கும் மானியம் உண்டு. உரிய முறையில் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மானியம் அனுப்பப்படும். அங்கிருந்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மானிய தொகையை பெற்றுக் கொள்ளலாம். இதில் முக்கியமான விஷயம், வருடத்தில் அக்டோபர் மாதம் மட்டுமே மானியம் பெற விண்ணப்பிக்க முடியும். அதுவும் ஆன்லைன் மூலமாக மட்டுமே!'' என்று தகவல்கள் தந்து முடித்தார் சையத் அகமத்.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்று சென்னையிலிருக்கும் 'மாடர்ன் அல்ட்ரா சோலார் எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடட்'. இதன் இயக்குநர் வித்தியாம்பிகாவிடம் பேசியபோது, ''சென்னையில் மட்டும் இதுவரை 40 வீடுகளுக்கும் மேல் நாங்கள் சோலார் தகடுகள் பொருத்திஉள்ளோம். இனிவரும் நாட்களில் பெரும்பாலான வீடுகளிலும் நிச்சயம் இந்த சோலார் தகடுகள் மின்னும்!

வீடுகளில்... ஒரு எல்.ஈ.டி லைட், ஒரு ஃபேன், மொபைல் சார்ஜர் ஆகியவற்றை தினமும் ஆறு மணி நேரம் பயன்படுத்துவதற்கு, குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் செலவில் சோலார் தகடுகள் பொருத்த வேண்டும். ஒருமுறை செலவு செய்தால் போதும், குறைந்தது 20 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பெற முடியும். மழைக்காலங்களில் சோலார் தகடுகள் இயங்குமா என்ற தயக்கம் வேண்டாம். காரணம், சூரிய ஒளியில் இருக்கும் போட்டான் கதிர்களை கிரகித்துதான் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. எனவே, பகலில் மேகமூட்டமோ... மழையோ இருந்தாலும், சோலார் தகடுகள் போட்டானை கிரகித்து மின்சாரத்தை உற்பத்தி செய்துவிடும்'' என்று சொன்னார்.

எல்லாம் சரி... சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்துபவர்களின் ரியாக்ஷன் எப்படி?
அதைப் பற்றி பேசுகிறார் சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், ''அரசாங்கம் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே என் வீட்டில் அமைத்தவன் நான். அப்படித்தான் சோலார் தகடுகளையும் எட்டு மாதங்களுக்கு முன்பே அமைத்துவிட்டேன். எங்கள் வீட்டுக்கான ஒரு நாளைய மின்சாரத் தேவை... சுமார் ஒரு கிலோ வாட். அதற்காக பத்து சோலார் தகடுகளைப் பொருத்தியுள்ளேன். கிடைக்கும் மின்சாரத்தை 10 இன்வெர்ட்டர் பேட்டரிகளில் சேமித்துப் பயன்படுத்துகிறேன். இதனால், பகல் மட்டுமின்றி, இரவிலும் சூரிய மின்சாரம் கிடைக்கிறது. இந்த எட்டு மாதங்களாக ஒரு நொடிகூட எங்கள் வீட்டில் பவர் கட் இல்லை. சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்துவதால், கரன்ட் பில் கட்டணம் வெகுவாகவே குறைந்து விட்டது. இன்னும் கொஞ்ச நாட்கள் போனால்... மின் கட்டணம் செலுத்தவே தேவையிருக்காது.

இதற்காக கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறேன். இதற்கு 20 வருடங்கள் வரை ஆயுள் உள்ளது. மாதா மாதம் கட்டும் கரன்ட் கட்டணத்தை இருபது ஆண்டுகளுக்கு கணக்கிட்டுப் பார்த்தால்... (பார்க்க பெட்டிச் செய்தி) சூரிய சக்தி மின்சாரத்துக்கு செய்யும் செலவு குறைவுதான். ஆறு வருடங்களுக்கு ஒரு முறை பேட்டரிகளை மாற்றினால் போதும். இப்போது அரசாங்கத்தின் மானியத்தைப் பெற விண்ணப்பித்திருக்கிறேன்'' என்று குஷியோடு சொன்ன சுரேஷ்,
''இப்போது வீட்டுக்கு வீடு டிஷ் ஆன்டனா இருப்பதுபோல... இனி வரும் காலங்களில் சோலார் தகடுகளும் இருக்கும்!'' என்று தன் எதிர்பார்ப்பையும் சொன்னார்!

நல்ல திட்டம் நோக்கி நாடே நகரட்டும்!
சோலார் தரும் லாபம்!
-------------------------------------------------------------------------------------------
மின் சாதனங்களின் ஒரு மணிநேர தேவைக்கான மின்சாரம்... டியூப் லைட்: 40-60 வாட்ஸ், சீலிங் ஃபேன்: 60-80 வாட்ஸ், டேபிள் ஃபேன்: 80-100 வாட்ஸ், டி.வி: 150-250 வாட்ஸ், எல்.சி.டி. டி.வி: 150-250 வாட்ஸ், டி.வி.டி: 40-60 வாட்ஸ், கம்ப்யூட்டர் சி.பி.யூ: 150-200 வாட்ஸ், மானிட்டர்: 100-150 வாட்ஸ், செல்போன் சார்ஜர்: 5 வாட்ஸ்.
----------------------------------------------------------------------

மேற்கூறிய மின்சாதனங்களின் அதிகபட்ச மின்தேவையை வைத்து ஒரு மணி நேரத்துக்குக் கணக்கிட்டால் மொத்தம் 1,155 வாட்ஸ் ஆகிறது. இதற்காக நாம் செலுத்தும் மின்கட்டணம் 1 ரூபாய் 15 பைசா (யூனிட்டுக்கு குறைந்தபட்ச கட்டணம் 1 ரூபாய்). இதையே 12 மணி நேரத்துக்குக் கணக்கிட்டால்... சுமார் 14 யூனிட்கள் வரும். இரண்டு மாதங்களுக்கு (60 நாட்கள் கணக்கிட்டால்...) 840 யூனிட்கள் வரும். இதற்கான கட்டணம்... 3,745 ரூபாய் 25 பைசா (1 முதல் 200 வரையிலான யூனிட்களுக்கு 3 ரூபாய்; 201 முதல் 500 வரையிலான யூனிட்களுக்கு 4 ரூபாய்: 501 முதல் 5 ரூபாய் 75 பைசா என கணக்கிடப்படுகிறது).

இருபது ஆண்டுகளுக்கு கணக்கிடும்போது... 4 லட்சத்து 49 ஆயிரத்து, 430 ரூபாய். ஆனால், முதல் கட்டமாக 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை செலவிட்டு சோலாருக்கு மாறிவிட்டால்... 'அடேங்கப்பா... நான் கரன்ட் பில்லே கட்டுறது கிடையாது' என்று தெம்பாக காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்... மின்வெட்டு என்கிற பிரச்னையும் இருக்காது.

--------------------------------------------------------------------
சூரிய மின்சாரம்... அசத்தும் குஜராத்!

ஆசியாவிலேயே மிக அதிகமான மின்சாரத்தை சூரிய ஒளி சக்தியின் மூலம் தயாரிக்க சோலார் பார்க் ஒன்றை 3,000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கியுள்ளது குஜராத் அரசாங்கம். ஸ்வாத் பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சோலார் பார்க்கிலிருந்து 214 மெகா வாட் மின்சாரம் பெற முடியும். சீனாவில் உள்ள சோலார் பார்க்கில் 200 மெகா வாட் அளவே மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது, குறிப்பிடப்பட வேண்டிய ஒப்பீட்டுத் தகவல்.

---------------------------------------------------------------------------
சூரிய சக்தி மின்சாரம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு, www.teda.in


என்ற வலைதளத்தை அணுகலாம்.

தொடர்புக்கு:
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை,
ஈ.வி.கே. சம்பத் மாளிகை,
ஐந்தாவது மாடி,
68, காலேஜ் ரோடு,
சென்னை 6,
தொலைபேசி: 044-28224830.
 -


நன்றி : தமிழ் இணையங்கள் 
பி.கு : இணையங்களில் வெளியான கட்டுரை . பொது நலன் கருதி நாம்  வெளியிடுகிறோம். இக்கட்டுரையில் வரும் மொழிச் சிதைவுக்கு அலை செய்திகள் பொறுப்பல்ல. 

உண்மையை மறைத்து ரசிகர்களுக்கு விஷம் ஏற்றும் முருகதாஸின் 'துப்பாக்கி'



ரசிகர்களுக்கு விஷம் ஏற்றும் முருகதாஸின் 'துப்பாக்கி'

துப்பாக்கி படத்தின் இறுதியில் இந்திய ராணுவத்திற்கு சமர்ப்பணம் (Dedicated to the Indian Army) என்று போடுகிறார்கள். படம் முழுக்க இந்திய ராணுவத்தின் துன்பங்கள், சாகசங்கள், அவர்கள் நமக்காக படும் பாடுகள் என்று ரசிகர்களுக்கு தேசபக்தியை ஏற்ற முயற்சித்திருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். 

எந்த உணர்வுமற்ற ஒரு சராசரி மனிதனாக துப்பாக்கியை ரசிக்கலாம்தான். ஆனால், உணர்வுள்ள தமிழனாக மட்டுமல்ல இந்திய துணைக் கண்டத்தின் அங்கங்களாக இருக்கும் காஷ்மீர் மக்கள், வட-கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள், சிகப்பு வழித் தடம் (Red corridor) என்று சொல்லப்படும் நக்சலைட்டுகள் இயங்கும் மாநிலங்களின் குடிமக்கள் ஆகியோரின் சார்பாக இந்தப் படம் ஊட்டும் ராணுவத்தின் ஊடான தேசபக்தி உணர்வை நாம் ஆட்சேபித்தே தீர வேண்டியிருக்கிறது. 

“இந்த 40 நாட்கள் விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்புகிற நீ அங்கே பாலைவனத்தில் ஒரு சிறிய குடில் அமைத்து தூக்கம் இல்லாமல் சின்ன விளக்கு வெளிச்சத்தில் இந்த விடுமுறைகால நினைவுகளோடு, உறவுகளை எல்லாம் விட்டுவிட்டு அங்கேபோய் கஷ்டப்படப் போகிறாயே” என்று விஜயிடம் பேசுகிறது ஒரு கதாப்பாத்திரம். விடுமுறை முடிந்து ராணுவ வீரர்கள் பணிக்கு திரும்பும்போது ரயில் ஏறுகையில் உறவினர்கள் குழந்தைகள் என்று கண்கலங்குவதாக காட்டி ராணுவ வீரர்களின் ‘தியாகத்தை’ நமக்கு உணர்த்துகிறார்கள். 

ராணுவ வீரர்கள் படுகிற கஷ்டங்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அதே சமயம் பரந்துப்பட்ட அளவில் அவர்கள் நாடு முழுக்க அரங்கேற்றி வரும் அத்துமீறல்களை நம்மால் நினைத்துப் பார்க்காமல் இருக்கவே முடியாது.

ராணுவ சிறப்பு சட்டம் (Armed Forces Special Power Act) அமலில் உள்ள காஷ்மீரிலும் மணிப்பூரிலும் மக்கள் அடிமைகளாக நடத்தப்படும் கொடுமை, தெருவில் போவோர் வருவோரை எல்லாம் சந்தேகக் கண்ணோடு சோதித்துப் பார்க்கும் அசௌகரியம், ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்படும் அப்பாவி இளைஞர்கள் என்று மனித உரிமை மீறல்களின் எல்லைக்கே சென்றும் எந்தவித விசாரணை வளையத்துக்குள்ளும் அகப்படாத இந்த ராணுவத்தை நாம் எப்படி மெச்ச முடியும்? 

தமிழகத்தில் மட்டும் என்ன கிழிகிறது? சுண்டக்காய் நாடான இலங்கை நூற்றுக்கணக்கான நம் மீனவர்களை சுட்டு வீழ்த்தியப் பின்னரும்கூட இந்திய ராணுவ என்ன செய்து கொண்டிருக்கிறது? தம் குடிமகன் ஒருவனுக்கு பிறநாட்டின் ராணுவத்தால் ஆபத்தென்றால் தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆட வேண்டும் என்ற அளவிலாவது இந்த ராணுவம் என்ன செய்தது? அல்லது ராணுவ அமைச்சகம்தான் என்ன செய்தது? 

இப்படிப்பட்ட இந்திய ராணுவத்தின் வீரச் செயல்களை போய் ராமேஸ்வரம் மீனவர்களிடம் சொல்லிப்பார்த்தால் தெரியும் இவர்களின் யோக்கியதை. இந்த லட்சணத்தில், இலங்கையில் இருந்து ராணுவ வீரர்களை இங்கே அழைத்துவந்து அவர்களுக்கு பயிற்சி வேறு தருகிறது இந்திய ராணுவம். இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பினால், நாங்கள் வேறு மாநிலத்திற்கு அழைத்து சென்று பயிற்சி தருகிறோம் என்கிறார்கள். கேவலம்! 

அடுத்தது, இஸ்லாமிய சகோதரர்களை தீவிரவாதிகளாகவே காட்டும் அயோக்கியத்தனம் இந்தப் படத்திலும் இருக்கிறது. இஸ்லாமிய தீவிரவாதிகளை காட்டிலும் பல மடங்கு ஆபத்தான மத அடிப்படைவாதிகள் உள்ள ஒரு நாட்டில், அடுத்து ஆட்சிக்கு வரத் துடிக்கும் ஒரு நாட்டில், சிறுபான்மை மக்களை ஒருவித அச்சத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இப்படிப்பட்ட படங்கள் அடிக்கடி வருகின்றன. 

ஆஹா நம் நாட்டின் ராணுவத்தை குறை சொல்கிறாயா? இது சரியா? என்று வறட்டு தேசியவாதம் பேச வேண்டாம். மக்களுக்காகத்தான் அரசு, அந்த மக்களை பாதுகாக்கத்தான் ராணுவம். ஆனால், இந்திய நாட்டின் அரசு இயந்திரமே மக்களுக்கு எதிராக இயங்குகிற போது அரசு உத்தரவுப்படி இயங்குகிற ராணுவமும் அப்படிதானே இருக்கும்.

காஷ்மீரையும் மணிப்பூரையும் தீவிரவாதிகளிடம் இருந்து காப்பதற்காக அங்கே முகாமிட்டு இருப்பதாக சொல்லும் ராணுவம் உண்மையிலேயே அந்த மக்களை பாதுகாக்கிறதா என்று அந்த மாநிலங்களின் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்திப் பார்த்தால் தெரியும். ராணுவம் அங்கேயே இருக்க வேண்டும் என்கிறார்களா அல்லது உடனடியாக வெளியேற வேண்டும் என்கிறார்களா என்று? சொந்த நாட்டு மக்களையே வலுக்கட்டாயமாக நிரந்தரமாக நசுக்கி வைத்திருக்கும் ராணுவத்தின் வீரத்தை இந்த திரைப்படத்தை பார்த்து நாங்கள் பூரித்து நிற்க வேண்டும் என்று இயக்குனர் முருகதாஸ் கருதினால், அது தமிழக மக்களிடையே எந்த பெரிய கருத்தியல் ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று உறுதியாக சொல்லலாம். வெறும் வணிக ரீதியாக வேண்டுமானால் இந்த படம் வெற்றி பெறும்.

முருகதாஸ் – தமிழ்நாட்டிலே பிறந்த ஒரு தமிழன் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், சிந்தனையில் ஆபத்தான கலப்படம் இருக்கிறது. இதை முகருதாஸின் முந்தைய படமான 7ஆம் அறிவிலேயே உணர முடிந்தது. அந்த படத்தில் சமூக நீதிக்கு எதிரான கருத்துகள் இருந்தன. இப்போது, இந்த துப்பாக்கி மூலமாக இந்திய தேசிய உணர்வு ரசிகர்களிடையே திணிக்கப்படுகிறது. முருகதாஸ் – தெரிந்தே செய்கிறாரா? அல்லது அறியாமையால் செய்கிறாரா? தெரியவில்லை. ஆனால், அவர் செய்வது ஆபத்தானது!


நன்றி - சீனிவாசன் மாணிக்கம்

மாற்றம் வேண்டும் இனி..





மாற்றம் வேண்டும் இனி.

இது ஏதோ விஜயகாந்த் மாற வேண்டும் என எழுதப்படும் கட்டுரை என நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

மாற்றம் வேண்டும் என 2006 ல் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் , 2011 ல் 29 சட்டமன்ற உறுப்பினரும் கொடுத்து , அடுத்து விஜயகாந்துக்கு முதல்வர் பதவி கொடுக்க நினைக்கும் மக்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

2005 ஆம் ஆண்டு அவர் கட்சி ஆரம்பித்த புதிதில், திரு. மதன் அவர்களுடன் ஒரு நேர்முக நிகழ்ச்சியில் , அவர் கூறியது ஊழலை ஒழிப்பேன் ,ஒழுக்கத்தை கடைபிடிப்பேன், நல்லாட்சி கொடுப்பேன் , குடும்ப அரசியலை ஒழிப்பேன் , ஏழை மக்களை காப்பேன் என கூறினர்.அதை அவர் காப்பற்றி கொண்டு இருப்பது வெறும் வார்த்தைகளில் மட்டும் தான்.



அரசியல்வாதி ஆவதற்கு, அவர் கூறிய அத்தனை தகுதிகளும் வேண்டும் , ஆனால் இந்த தகுதிகள் எல்லாம் அவரிடம் உண்டா? அவர் திரையில் செய்தது எல்லாம் நிஜத்தில் நடக்கும் என நினைத்தார்கள், நிழலுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசங்கள் உள்ளன என அவர் நிருபித்து விட்டார் .

அவருடைய ரசிகர்கள் தான் அவருடைய தொண்டர்கள். அவர் ஊழல் அற்ற, ஒழுக்கமான ஆட்சி நடத்துவதருக்கு எப்புடி பட்ட வேட்பாளர்களை

 நிறுத்தி இருக்க வேண்டும் ? சமிபத்தில் கட்சி தாவிய (அப்படியே  வைத்து கொள்ளுவோம்) 4  சட்டமன்ற உறுபினர்களை உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். ஒருவர் நடிகர், மற்றொருவர் திரைப்பட தயாரிப்பாளர், இன்னொருவர் அவரை போலவே உருவ ஒற்றுமை உள்ள விஜயகாந்தின் வெறி பிடித்த 
 
ரசிகர், கடைசியில் இருப்பவர் விஜயகாந்தின் பினாமி. ஒரு வேலை இவர்கள் ஆட்சி பிடித்து இருந்தால், இவர்கள் இந்த ஒழுக்கத்தையும் , அனுபவத்தையும் வைத்து தான் அமைச்சர்களாக நம்மை ஆண்டு கொண்டு இருப்பார்கள்.

இவர்களுக்கு அடிப்படை அரசியல் தெரிய வாய்பில்லை, பொது பிரச்சனைகாக போராடிய அனுபவமும் இல்லை.


ஊருக்கு தான் உபதேசம் என்பது போல,கருணாநிதி , ராமதாஸ் அவர்களின் குடும்ப அரசியலை ஒழிப்பேன் என்று கூறிய இவருக்கு இந்த வார்த்தை பொருந்தாது போல.தேமுதிக வில்  இவருடைய மனைவி மற்றும் மச்சானின் தலையீட்டை யார் இவரிடம் சொல்லுவது. மச்சான் சுதீஷ் ஆவது  மாநில இளைஞர் அணி  பொறுப்பாளராக உள்ளார், ஆனால் இவருடைய  
மனைவி என்ன பொறுப்பில் உள்ளார் என்று யாருக்கும் புரியவில்லை. அவரது மனைவி இல்லாமல் எந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வது இல்லை, அவருக்கு 'அண்ணி' யாரே என்று பட்டம் வேறு.


இந்த குடும்ப அரசியலை யார் ஒழிப்பது?




எப்பொழுதாவது பத்திரிகை சந்திப்பு நடக்கும், பத்திரிகையாளர்கள் யாராவது கேள்வி கேட்டால் அவர்களுக்கு பதில்  சொல்லாமல் இவர் எதிர் கேள்வி கேட்பது தான் இவரது பாணி. சமிபத்திலே ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நீங்கள் ஏன் சட்டசபைக்கு போவதில்லை என கேள்வி கேட்கப்பட்டது, அவருடைய பதிலை கேட்ட பொழுது நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவருடைய பதில் இதுதான், 'ஆமா நான் 

சட்டசபைக்கு போய்ட்டா அப்படியே ரோடு போட்டுவாங்காள' , சட்டசபை 
உறுப்பினர் ,சட்டசபை எதிர் கட்சி தலைவராக இருந்து கொண்டு இவர் இப்படி பதில் அளித்துள்ளார்.


ஒரு விஷயம் தெளிவாகிறது , விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததே முதல் அமைச்சர் ஆவதற்கு தானே ஒழிய , மக்களுக்கு சேவை செய்வதருக்கு அல்ல. 
கருப்பு 


 எம்ஜிஆர் 
என இவர் தன்னை தானே சொல்வதாலும், பொன் மன செம்மல் 
 எம்ஜிஆர் 
 போல் திரையில் வசனம் பேசியதாலும் தான் தான் அடுத்த 
முதல்வர்  என கனவில் இருக்கும் இவர் , எம்ஜிஆர் 


போல் பொது வாழ்கையில் 

இருக்க மறந்தது ஏனோ?


 திரையில் பேசும் வசனம் பேச்சளவில் மட்டும் அல்ல, நிஜத்திலும் அப்படியாய் தான் வாழ்ந்தவர் எம்ஜிஆர் , ஹரிதாஸ் எனும் படம் தொடர்ந்து  நான்கு தீபாவளி கண்ட திரைக் காவியம். அதை குறித்து கட்டுரை  எழுதுவதற்கு நான் ப்ராட்வே ( இந்த திரை அரங்கில் தான் நான்கு வருடம் ஓடியது)  திரை அரங்கு உரிமையாளர் திரு, சுரேஷ் அவர்களை 2008 ஆம் ஆண்டு சந்திதேன். அப்பொழுது உலகம் சுற்றும் வாலிபன்' திரைபடத்தை மறுபடியும் வெளியிட்டு இருந்தார்கள்.

எம்ஜிஆர் பற்றி திரு சுரேஷ் அவர்கள் சில சுவாரசியமான விசயத்தை பகிர்ந்து கொண்டார்.
         
 எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்த நேரம், ஒரு படத்தின் வெற்றி விழா ப்ராட்வே திரை அரங்கில்  மதியம் நடப்பாக  இருந்தது, ஆனால் வேலை பளு காரணமாக 
எம்ஜிஆர் அவர்கள் 

3 மணி நேரம் தாமதமாக வந்தார், அவரை 
கண்டவுடன் கூட்டம் அலைமோதியது, ஆர்பரித்தது.  
அந்த இரைச்சலில்லும் ஒரு ஏழை மூதாட்டியின் நடுக்கமான குரலை கேட்டு அவர் அருகில் செலுகிறார், அந்த மூதாட்டி எம்ஜிஆர்  அவர்களிடம் , 'மவராசா உனக்காக நான் சமைச்சி ஒரு கை பிடி சோறு கொண்டு வந்தேன், ஆனா கூட்டத்தில் எல்லாமே கொட்டி போச்சு என்றார், அவ்வளவுதானே என கூறிய எம்ஜிஆர், உடனே மூதாட்டியின் கையில் ஒட்டியிருந்த 2 பருக்கை சோற்றை மூதாட்டியின் கையே வைத்தே ஊட்டி விட வைத்தார்'. இது தான் எம்ஜிஆர் .

எம்ஜிஆர்  போல் ,   அரசியல்வாதியான நடிகர்கள் இருப்பார்களா ? வருங்கால அரசியல் கனவுகளோடு இப்பொழுது  பொது வாழ்கையில் 'நடித்து' கொண்டு இருக்கும் நடிகர்கள் செய்வார்களா? 


இந்திய அளவில் புகழ் பெற்ற சமுக சேவகர்  அரவிந்த் கேஜரிவல், ஒரு அணு உலை ஆதரவாளர். ஆனால் கூடங்குளத்தில் காவல் துறை தடியடி நடத்தியபொழுது இடிந்தகரைக்கு வந்து 3 நாட்கள் மக்களோடு மக்களாக தங்கி இருந்து தடியடிக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.ஆனால் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக ( இருந்த ) இருக்கும் விஜயகாந்த் , ரோம் நகரம் தீ பற்றி எரிந்தபோது மன்னன் பிடில் வாசித்த கதையாக , தனது குடும்பத்துடன் உல்லாச பயணம் சென்று இருந்தார். நாடு திரும்பியவுடன் தனது கண்டனத்தை பதிவு செய்து இருக்க வேண்டும்.  குறைந்த பட்சம் தனது நிலைபாட்டை தெளிவு (எப்போது தான் அவர் தெளிவாக இருந்தார் என நீங்க கேட்பது எனக்கு கேட்கிறது) படுத்தியிருக்க  வேண்டும் , ஆனால் எதுவும் நடக்கவில்லை. இத்தனைக்கும் அரசியலில் மிகவும் அனுபவமிக்க, இப்போது  அவரிடம் இருந்து வெளியேறிய திரைப்பட தயாரிப்பாளரின் தொகுதி தான் அது. முன்பு அணுஉலை போராட்டக்  குழுவினரை ஆதரித்தவர்களில் விஜய்காந்தும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.  

விஜயகாந்தின் இளைய மகனின் பெயர் பிரபாகரன் , தமிழீழ தேசிய தலைவர் நினைவாக தான் இப் பேரை வைத்துள்ளேன் என அவரே வெளிபடையாக கூறியுள்ளார். சில காலம் அவர் தனது பிறந்த நாளை கொண்டாடாமல் இருந்தார். அதற்கு அவர் கூறிய காரணம் ஈழ தமிழர்கள் அங்கு கொடுமை அனுபவிக்கும் பொழுது நான் எப்படி பிறந்தநாள் கொண்டாட முடியும் என கூறியவர், இப்போது ஈழ தமிழர்கள் சந்தோஷமான சூழ்நிலையில் உள்ளார்கள் போல் இருக்கிறது  அவருக்கு.  அதனால் தான் சமிப காலமாக தனது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறார். 

இவருடைய சமீபகால நடவடிக்கைகள் எல்லாம்  யாருக்காக தனது பிறந்த நாளை கொண்டாடாமல் இருந்தாரோ அவர்களை மீளா துயரத்தில் தள்ளிய காங்கிரஸ் கட்சி இருக்கும் திசை நோக்கிதான் உள்ளது.

அவர்கள் துடைக்கப்பட வேண்டியவர்கள் , இவர்கள் தூக்கியடிக்க பட வேண்டியவர்கள், கூட்டணி சரியானது தான்.

சாதாரண மக்கள்  பிரபலங்களிடம் நெருங்க முடியாது.  மக்களின் பிரச்சனைகள் எல்லாம் நாட்டின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கை நண்பர்கள் மூலமாக மக்கள் தெரியப் படுத்துகிறார்கள். சாதாரண கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை, ' நாயே நீயா எனுக்கு சம்பளம் தர ' என சொன்ன இவர் , நாளை மக்களும் இவரிடம் கேள்வி கேட்டால் இதே பதில் தான் சொல்லுவர் என்பது நிச்சயம்.பத்திரிகையாளர்களை பார்த்து பயப்படாத இவர் மக்களை பார்த்து மிரண்டு விடுவாரா என்ன? 

பத்திரிகையாளர்களை  கேவலப் படுத்தியதிற்கு பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் திரு டீ. எஸ். ஆர். சுபாஷ் அவர்கள் , விஜயகாந்தை எச்சரித்து பேசியதாவது , 


விஜயகாந்த் ஒரு நடிகர், அரசியல்வாதி மட்டும் அல்ல, அவரே ஒரு ஊடகத்தை நடத்தி கொண்டு இருக்கிறார் , நாளை அவருகே எதாவது 
 பிரச்சனை என்றால் நாங்கள் தான் போராடுவோம்.  இதுதான் பத்திரிக்கை தருமம், விஜயகாந்த் எங்கு சென்றாலும் அவரை பின் தொடர்ந்து சென்று போராடுவோம், இதை எல்லாம் கடைபிடிக்காத விஜயகாந்துக்கு  அரசியல் ஒரு கேடா, என எச்சரிக்கை விடுத்தார்.

பத்திரிகையாளர்களை நடிகர் விவேக்கை சில காலம் புறக்கணிக்கும் பொழுது அவர் திருந்தி, தான் உண்டு  தனது வேலை உண்டு என இருந்து கொண்டு இருக்கிறார்.  ஆனால் விஜயகாந்த் திருந்தவில்லை என்றால் நாட்டுக்கும் கஷ்டம் , வீட்டுக்கும் கஷ்டம்.

வேறு கட்சி தலைவர்களை இவர் அடிக்கடி ராஜினாமா செய்ய சொல்லும் இவர் ,  இப்போது தனது 29 சட்டமன்ற உறுப்பினர்கள் , மனிக்கவும் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் ( 5 உறுப்பினர்கள் கட்சி மாற போகுவதாக செய்தி)  உடன்  ராஜினாமா செய்விர்களா என கேட்டால் இவருடைய பதில் என்னவாக இருக்கும்.  ''ஆங் ங் ங் ங் ங் ங், கரெக்ட் அதே தான் மற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்  எல்லாரும் ராஜினாமா செய்வாங்களா'' என்ற பதில் தான் வரும் .

ஒரு விமர்சனத்தை தங்கி கொள்ள முடியாத இவர், நாகரிகம் என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் 'நிலையில்' உள்ள இவர், நாளை மக்கள் விமர்சித்தால் நாக்கை 'துருத்தி' கொண்டு படத்தில் பாய்வது போல் மக்களிடத்தில் பாயுவார் போல. 

இணையதளத்தில் வாழும் படித்த மக்கள் 'விஜயகாந்தை' புறக்கணித்து பல காலங்கள் ஆகிவிட்டது. அதுபோல் போல் வெகு ஜன மக்களாலும் விஜயகாந்த் புறக்கணிக்க பட வேண்டும். இவரால் தமிழ் திரையில் 
ஒரு நல்ல நகைச்சுவை நடிகரை நாம் இழந்தது தான் மிச்சம்.
       
   மாற்றம் வேண்டும் , மாற்றம் வேண்டும் , என கூறி தவறான நபர்களுக்கு வழி வகுக்கும் மக்களிடம் , மாற்றம் வேண்டும் இனி .....

- சீனிவாஸ் திவாரி 

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடும் நேரமிது: அணு சக்திக்கு மாற்றாக அபார வளர்ச்சி பெற்றுள்ள சூரியசக்தி மின் நிலையங்கள்!

அமெரிக்காவின் நெவேடா பாலைவனத்தில்
நிறுவப்பட்டுள்ள சூரிய சக்தி மின் நிலையம்!
நீங்கள் அணு உலையை ஆதரிப்பவராக இருந்தால், சோலார் பேனல்கள் மற்றும் சோலார் மின்சாரம் தயாரிப்பாளர்களின்  ஆண்டு இறுதி அறிக்கையை பார்த்து உண்மையில் வியந்து போவீர்கள். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டின் மத்தியிலேயே அவை பெரும் வளர்ச்சியையும், லாபத்தையும் அடைந்துள்ளன. 

2012-ஆம் ஆண்டில் அமெரிக்காவை சோலார் பேனல் மின்சார சக்தி திட்டங்கள் தான் ஆக்கிரமித்து இருக்கும். அந்த துறையின் வளர்ச்சி சீராக, நன்றாக வளர்ந்து வருகிறது என அமெரிக்காவில் உள்ள 'சூரிய எரிசக்தி தொழில் கூட்டமைப்பின்' ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது.

இதுவரை 742 மெகாவாட் பெறுகிற அளவுக்கு சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. 2012 இரண்டாம் காலாண்டில் இரு மடங்கு சூரிய தகடுகளின் தேவை அதிகரித்து இருக்கிறது.

இந்த ஆண்டு 3.2GW இரண்டு பயன்பாட்டு அளவு சோலார் பேனல்கள் திட்டங்கள் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், தனியார் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் நிறுவப்பட்ட இருக்கின்றன. 447 மெகாவாட் மற்றும் இன்னும் 20 திட்டங்கள் மூலம், மிகப்பெரிய சோலார் தகடுகளின் தேவைகள் அதிகரித்து இருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா, அரிசோனா, மற்றும் நியூ ஜெர்சி போன்ற சில முக்கிய மாநிலங்களில் சோலார் வளர்ச்சி திட்டங்களுக்காக தனிப்பட்ட அரசு கொள்கைகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. 

கலிபோர்னியாவில் சூரிய திறன் ஒரு கணிசமான அளவு ஏற்கனவே உள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அணு உலை, நிலக்கரி பயன்படுத்தப்படும் அனல் மின் நிலையம் ஆகியவற்றுக்கு மாற்றாக சோலார் மின்சாரம் வளர்ந்து வருவதையும், வளர்ந்தாக வேண்டிய கட்டாயத்தையும் பற்றிய  கட்டுரையை இந்த வாரம் வெளியிட்டு இருக்கிறது. சோலார் சக்தியினை பற்றிய யோசனைக்கு இதுவே உகந்த நேரம் என்று அது வர்ணித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கூடங்குளத்தை மூடும் நேரமிது.

விகடனில் வெளிவந்த பெண் போராளியின் பேட்டி. ஈழ ஊடகவியலாளர்கள் கண்டனம்


ஆனந்த விகடனில் சில நாட்களுக்கு முன் முன்னாள் பெண்புலி தற்போது பாலியல் தொழிலாளி என்று ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தார்கள் . அதில் ஒரு பெண் போராளி பேட்டி கொடுத்தது போல் ஒரு கதையை எழுதி இருந்தனர். அந்தப் பெண் விடுதலைப் போராட்டம் என்பது இனி தேவை இல்லை எனவும் , தமிழகத்  தலைவர்கள் ஈழத்து மக்களுக்காக எந்த போராட்டமும் செய்யத் தேவை இல்லை எனவும், தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் எனவும் அந்த பெண் போராளி  பேட்டி அளித்திருந்தார். இது தமிழக தமிழர்களிடம் உலகத் தமிழர்களிடமும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது . அந்த கட்டுரைக்கு பதில் அளிக்கும் விதமாக ஈழத்து பத்திரிக்கையாளர்கள் தங்கள் எதிர்வினை கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர். 

யாழ்ப்பாணத்தின் முன்னணி கள செய்தியாளர்கள் சிலரது கட்டுரை எதிர்வினை கட்டுரை  இங்கே இணைத்துள்ளோம் .


ந.பரமேஸ்வரன் - சிரேஷ்ட ஊடகவியலாளர்

ஈழத்தவர்களது இரத்தத்தையும், கண்ணீரையும் வர்த்தகம் செய்வது இவர்களுக்கு வழக்கமாகப்போய்விட்டது. அவர்கள் பிழைப்பு அவர்களுக்கு. இவர்கள் திருந்துவார்களென நான் நம்பவில்லை.

இ.தயாபரன் - சிரேஷ்ட ஊடகவியலாளர்
தலைவர் - நிமலராஐன் ஞாபகார்த்த அமைப்பு

நாங்கள் தொப்புள் கொடி உறவென அடிக்கடி கூறிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒட்டு மொத்தப் பெண் போராளிகளையும் கேவலப்படுத்தும் வகையினில் எழுதிக் கிழிக்கிறார்கள். விகடன் இதுவரை அர்ப்பணிப்புடன் செய்த சிலது கூட இக்கட்டுரையால் நாறடிக்கப்பட்டுவிட்டது. பாவம் அவர்களை சமூகம் உங்கள் கட்டுரைகளைப்; பார்த்து தவறாக எடை போட்டுவிட போகிறது. எமது அமைப்பு கூட சத்தமின்றி சத்திர சிகிச்சை தொழில் முயற்சியென பல உதவிகளை வழங்கிக்கொண்டேயிருக்கின்றது.
ஆ.சபேஸ்வரன் - ஊடகத்துறை விரிவுரையாளர்
உதவி ஆசிரியர், யாழ் தினக்குரல்
எங்களுக்காகக் கதைப்பதாகக் கூறிக் கொண்டே நாறடிக்கும் முயற்சி. தமிழக செயற்பாட்டாளர்களையெல்லாம் வம்புக்கு இழுத்து, சோர்ந்து போகச் செய்யும் நன்கு திட்டமிடப்பட்ட சதி முயற்சி. பின்னால்; இருப்பவர்கள் யார் என்று புரிகின்றது.


ந.பொன்ராசா - ஊடகவியலாளர் செயலாளர், வட இலங்கை பத்திரிகையாளர் சங்கம்


நாம் பகிரங்கமாகச் சவால் விடுகின்றோம். அவ்வளவு பகிரங்கமாக அரசியல் கருத்துக்களை முன்வைக்கும், பெண் போராளி விபச்சாரத்துக்குப் போவதாகச் சொல்கிறீர்களே விபரத்தைத் தாருங்கள். உதவுகின்றோம். அவ்வாறில்லாமல் இது பொய்யாகப் புனையப்பட்டதென்றால், அனைத்து பெண் போராளிகளிடமும் விகடன் மன்னிப்பு கோர வேண்டும்.


எம்.நியூட்டன் - ஊடகவியலாளர், வீரகேசரி


தடுப்பு முகாம்களிலும், பின்னரும் பெண் போராளிகள் மீதான துன்புறுத்தல்கள் எமக்கும் தெரியும். ஆனால் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வீம்புடன் வாழ முற்பட்டுள்ளதை நாம் ஊக்குவிக்கின்றோம். அவர்களைச் சமூகம் நிராகரித்துவிட்டதாக கூறுவது பச்சைப் பொய். அவர்களுக்கு உதவினால் பழிவாங்கப்படுவார்களென்ற அச்சம் உண்டு. அவ்வாறு உதவினால் காணாமல் போக கூட வேண்டியிருக்கும். அதையும் மீறி அவர்களைத் தூக்கிவிட கை கொடுத்தவாறு தான் இருக்கின்றார்கள்.


ஈழத்தமிழர்களது இரத்தமும், கண்ணீரும் பெரும்பாலும் தமிழக ஊடகங்களுக்கு சந்தை வாய்ப்பை கூட்டித்தரும் வணிகப் பொருட்களே. இப்போது அவர்களுக்கு விபச்சாரம் விற்பனைப் பொருளாகிறது. எந்தவொரு முன்னாள் போராளியும் விபச்சாரியாக இந்த தேசமும், உறவுகளும் விடப்போவதில்லை. அவ்வாறு அவர்கள் விபச்சாரியானாலும் நீங்கள் செய்யும் ஊடக விபச்சாரத்தினை விட அது ஒன்றும் மோசமானதல்ல.


விகடனில் வெளிவந்த பேட்டி குறித்து, ஆதி என்ற ஈழத்தமிழரின் எதிர்வினை இது...

"நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற தலைப்பில் அருளினியனால் எழுதப்பட்டு விகடனில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில் முழுக்க முழுக்க போர்க்குற்ற ஆதார வாக்கு மூலம் இருந்தும் அதை மனித உரிமை அமைப்புகளுக்கோ சம்மந்தப்பட்ட விசாரணைக் குழுக்களுக்கோ அனுப்பாமல் வெறும் வியாபாரத்திற்காக மட்டுமே பயன்படுத்தி விகடன் யாரைக் காப்பாற்ற நினைக்கிறது.

சனல் 4 உட்பட எத்தனையோ ஆங்கில ஊடகங்கள் தமிழ் மக்களுக்காக பல வழிகளிலும் தமிழ் மக்களின் நியாயத்திற்காக உலக அரங்கில் குரல் கொடுக்க விகடனோ ஒரு போராளியை விபச்சாரியாக்கி பணம் சம்பாதிக்கிறது.

விகடன் திருமாவேலனுடனும் அருளினியனுடனும் தொடர்பு கொண்டேன்

உண்மையாகவே இந்த வாக்கு மூலம் எடுக்கப்பட்டிருந்தால் அதை மனித உரிமை அமைப்புகளுக்கு போர்க்குற்ற ஆதாரா வாக்கு மூங்களாக அனுப்புங்கள் அல்லது என்னிடம் தாருங்கள் நான் அனுப்புகிறேன் என்று விகடன் "திருமாவேலனிற்கு" இன்று நண்பகல் முதல் இது வரை ஏராளமான அழைப்புகளை எடுத்துவிட்டேன்.

முதல் தடவை எனது அழைப்பை ஏற்ற அவர் "நான் ஆதி பேசுகிறேன்.... அருளினியனால் எழுதப்பட்ட கட்டுரை சம்மந்தமாக.." என்று உரையாடலை தொடரும் பொழுது "ஹலோ..ஹலோ... " என்ற படி அழைப்பை துண்டித்துவிட்டார். அதன் பிறகு எல்லா அழைப்புகளையும் துண்டித்துக் கொண்டே இருக்கிறார்.

தவிர அருளினியனுக்கு அழைப்பை எடுத்து கேட்டேன்.. அவர் தான் விகடனின் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஒரு வேலையாள் மட்டுமே என்று சொல்லியிருந்தார்.

"உங்களிடம் போர்க்குற்ற ஆதாரம் இருந்தும் அதை வெறும் சம்பளத்திற்காகவா மறைக்கிறீர்கள்" என்று கேட்டேன்... தன்னிடம் எதுவும் இல்லை நீங்கள் விகடன் அலுவலகத்திலேயே கேளுங்கள் என்று சொன்னார்.

ஆக பேட்டி உண்மை என்றால் சிறிலங்கா அரை காப்பாற்றுவதற்காகவா விகடன் போர்க்குற்ற ஆதாராங்களை சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு கொடுக்காமல் மறைக்கிறது??? சிறிலங்கா அமச்சர் ஒருவரும் பெண்கள் மீதான வன்முறையில் நேரடியாக ஈடுபட்டார் என்று பாதிக்கபட்ட பெண் கொடுத்திருக்கும் வாக்கு மூலத்தை விகடன் என்ன நோக்கத்திற்காக மறைக்கிறது??

அல்லது வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இதை எழுதியிருக்கிறார்கள்.

தவிர..

சுதந்திர மற்றும் ஆனந்தபுரச் சமர்களில் தனது பிள்ளைகளை தன் தாய் தகப்பனிடம் கொடுத்துவிட்டு களமாடியதாக சொல்லியிருக்கும் பெண் 3 வருடங்கள் கழித்து வந்து பிள்ளைக்கு பாலூட்டுவதற்காக பாலற்ற முலையை கொடுத்தாள் என்று அருளினியன் எழுதியிருப்பது அருளினியனின் கற்பனை வளத்தையும் விகடனின் காம வெறியையும் காட்டுகிறது.

அது போக யோ.கர்ணனை முள்ளிவாய்க்கால் வரை போராடிய முன்னாள் போராளி என்று எழுதியவர்தான் அருளினியன். ஆனால் யோ. கர்ணன் ஏற்கனவே விடுதலைப்புலிகள் அமைப்பின் தொலைக்காட்சி பிரில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது பொம்பிளைப் பிள்ளைகளோடு அநாகரிகமாக நடக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்ட்டவர் என்பது ஊரறிந்த விடையம். இது புதுசாக முழைத்திருக்கும் அருளினியனுக்கோ விகடனுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதுபோக தமிழ்நாட்டு ஊடகங்களிற்கு ஈழத்தமிழர் பிரச்சினை என்பது வெறும் வியாபார நோக்கமே. தனது சொந்த சம்பள உயர்விற்காக, வலிகளை தாங்கி ஊமைகளாக போயிருக்கும் போராளிகளை கொச்சைப்படுத்தவும்.. தமிழீழ பெண்களை இழிவுபடுத்தவும் அருளினியன் ஆரம்பித்திருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை.

வாழ்நாளில் போர்களையோ அல்லது களம் நின்ற போராளிகளையோ சந்தித்திராத அருளினியனுக்கு எல்லாமே சினிமாவாகதான் தெரியும்.

போராளிகள் வறுமையில் இருக்கிறார்கள் ஆனால் யாரும் பிச்சையெடுக்கவில்லை. வாழ்வை எதிர்கொள்ளும் பலம் அவர்களுக்குள் ஊட்டப்பட்டிருக்கிறது!!!!

பேட்டி உண்மையென்றால்!!

தமிழினத்தின் மீது நடாத்தப்பட்ட மிகக் கொடுமையான இன அழிப்பு போர்க் குற்றச்சாட்டுகள் பற்றி ஆதாரங்களை சேகரித்து ஆனால் தனது வேலை மற்றும் சம்பளத்தை தக்க வைத்து கொள்ளவதற்காக, அதை பகிரங்கப்படுத்தி நியாம் கேட்க வக்கில்லாத அருளினியனும் ஆதாரங்களை ஒளித்து வைத்து சிங்கள அரசிற்கும் இந்திய அரசிற்கும் சலியூட் அடிக்கும் விகடனும் தமிழீழ போர் பற்றியோ தமிழ் மக்களின் விடுதலை பற்றியோ கதைக்க அருகதையற்றவர்கள்.

வெறும்  பணத்திற்காக சொந்த இன அழிப்பு ஆதாரத்தையே மறைக்கும் இவர்கள் இனிமேல் நடைப் பிணங்கள் தான்...

உண்மையிலேயே இனப் பற்று இருந்தால்... ஒடுக்கப்படும் இனத்திற்கான ஊடக நேர்மை இருந்தால் ஆதாரங்களை வெளிப்படுத்தி நியாயம் கேட்கட்டும்.. இல்லையேல் எம்மிடம் தரட்டும் அதை நாங்கள் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து நியாயம் கேட்போம்.

ஆதி


[vuukle-powerbar-top]

Recent Post