மூன்று தமிழர்களின் மரண தண்டனை வழக்கு - தமிழர்களுக்கு பின்னடைவு !
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் வழக்கு சென்னை நீதி மன்றத்தில் தான் நடைபெற்று வந்தது. அவர்களுடைய மரண தண்டனையை கூட சென்னை நீதி மன்றத்தில் தான் ஒத்தி வைக்கப்பட்டது. தீர்ப்பின் நாளில் தமிழர்கள் பெருந்திரளில் நீதி மன்ற வளாகத்தில் குவிந்தனர். இதனால் தான் தீர்ப்பு மூன்று தமிழர்களுக்கும் சாதகமாக அமைந்தது என்று காங்கிரஸ் காரர்கள் கருதினார்கள்.

இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தண்டனையை குறைக் கூடாது என காங்கிரஸ் காரரான வெங்கட் என்பவர் உச்சநீதிமனறத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மூவரின் மனுவை உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று வெங்கட் வலியுத்தி இருந்தார்.
தூக்குக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. எனவே, விசாரணைக்கு இணக்கமான சூழல் இல்லாததால் வழக்கை மாற்ற கோரிக்கை விடப்பட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் மனுவை சுப்ரீம்கோர்ட் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெங்கட் மனுவை விசாரித்த நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யாய தீர்ப்பு கூறினர். இதனால் ஜூலை 10ம் தேதி மூன்று பேரின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கும். இப்போது உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை விசாரிக்க உள்ளதால் தமிழர்களுக்கு இது சாதகமாக அமையாது என்று தமிழின உணர்வாளர்கள் கருதுகின்றனர். மூன்று தமிழர்களின் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் முயற்சிக்கு இந்த முடிவு ஒரு பின்னடைவு என்று ஆர்வலர்கள் கருதுகின்றனர்.