Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் நடந்த சித்திரை புகைப்படக் கண்காட்சி (படங்கள்)


சித்திரை புகைப்படக் கண்காட்சி.

வீடியோ-ஆடியோ எடிட்டிங், கிராபிக்ஸ், அனிமேஷன், ஜர்னலிசம், விசுவல் கம்யூனிகேஷன் ஆகிய பட்டய படிப்புகளை செவ்வனே பயிற்சி அளித்துவரும் "சாஃப்ட்வியூ மீடியா காலேஜ்" நிறுவனம், போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி பாடத்திட்டத்தை நடத்தி வருகிறது. போட்டோகிராபி பாடத்திட்டம் மூலமாக பத்திரிகைகள், தொலைகாட்சி மையங்கள், விளம்பர நிறுவனங்கள் மற்றும் தொழிற்மையங்களில் வேலைவாய்ப்பை பெறலாம்.

மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்க மற்றும் சிறந்த மாணவர்களை, கலைத்துறையில் அடையாளம் காட்ட ஆண்டுதோறும் சித்திரை புகைப்படக் கண்காட்சியை சாஃப்ட்வியூ நிறுவனம் நடத்தி வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டல் செல்லாஸ்-இல் காலை 10.00 மணி முதல் சிறப்புடன் நடைபெற்றது. பல தலைப்புகளுடன் நடத்தப்படும் இப்புகைப்படக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் பங்கு ஏற்கின்றன. சிறந்த மாணவர்களுக்கு விருதுகளும், வேலைவாய்ப்பையும் அளித்து சாஃப்ட்வியூ கவனிக்கிறது. 

இவ்வருட 2012 சித்திரைப் புகைப்படக் கண்காட்சியில் இயக்குநர் மு.களஞ்சியம், இயக்குநர் ஜே.எஸ். நந்தினி, சின்னத்திரை நட்சத்திரங்கள் பிரியா, கௌரி ஆகியோர் கலந்து கொண்டனர். வயல் வரப்பு குறித்த புகைப்படத்தை எடுத்த சென்னை செங்குன்றத்தை சேர்ந்த தமிழ் இலக்கியன் முதல் பரிசு பெற்றார். இச்சித்திரைப் புகைப்படக் கண்காட்சியில் மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

வீடியோ கிராபி மற்றும் போட்டோகிராபி பயிற்சி வகுப்புகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஆழமாக கற்றுத்தரப்படுகிறது. இதன் அடுத்த வகுப்பு மே 5ம் தேதி (சனிக்கிழமை) இதன் பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றது. கூடுதல் விவரங்களை அறிய அணுகவும் திருமதி.கவிதா, சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் 117, நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை-29. தொலைபேசி: 42113535, 9940084476 eMail: softviewindia@gmail.கம












[vuukle-powerbar-top]

Recent Post